31 December, 2010

ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையும்; இந்தியாவின் அடவாடித்தனமும்!

இங்கிலாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் உள்ள விமான நிலையத்தில் 2007ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியர் சபீல் அகமது கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சபீல் அகமதுவின் உறவினர் ஹனீப். இவர் ஒரு டாக்டர். இவர் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் உள்ள கோல்டு கோஸ்ட் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். அவரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்தனர்.
இங்கிலாந்து நாட்டுக்கு ஹனீப் சென்றபோது, அவர் தன் மொபைல் போன் மற்றும் சிம்கார்டுகளை சபீல் அகமதுவின் வீட்டில் தவறுதலாக விட்டு விட்டு வந்தார். இதை தொடர்புபடுத்தி அவர் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் 12 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். இது இந்திய மக்களை கோபப்படுத்தியது. இதன் பிறகு கிளார்க் கமிஷன் விசாரணை நடத்தி ஹனீப் குற்றமற்றவர் என்று அறிவித்தது. இந்த நிலையில் ஹனீப் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
மானநஷ்ட வழக்கை கைவிடுவதற்காக அவருடன் ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில் அவர் வழக்கை கைவிடுவது என்றும், அதற்கு பதிலாக அரசாங்கம் அவரிடம் மன்னிப்பு கேட்பது என்றும், அதோடு இழப்பீடாக ஒரு தொகை வழங்குவது என்றும் முடிவானது.அதன்படி ஆஸ்திரேலிய அரசாங்கம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது என்று பத்திரிக்கை செய்திகள்  கூறுகின்றன.
 
இந்த செய்தியின் மூலம் இந்தியாவின் அதிகார வர்க்கத்திற்கு ஒரு படிப்பினை உள்ளது. அது என்னவெனில், இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும், அதற்காக முதலில் சந்தேகப்பார்வை பார்க்கப்படுபவர்களும், கைது செய்யப்படுபவர்களும் முஸ்லிம்களே என்ற எழுதப்படாத சட்டம் இந்தியாவில் நிலவுகிறது. மாலேகான் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளில் கூட உண்மையான இந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னால், அந்த பழியும் முஸ்லிம்கள் மீதே  பதிந்தது.
 
ஒரு தீவிரவாத  சம்பவம் நடந்த உடனேயே அதுபற்றி விசாரணை தொடங்கும் முன்பே, அந்த தீவிரவாத செயலை பொறுப்பேற்று  கொண்டதாக ஒரு முஸ்லிம் அமைப்பு [அப்படி ஒரு அமைப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது மில்லியன் டாலர் கேள்வி என்பது தனி விஷயம்] பெயரை பத்திரிக்கைகளில் பரவவிடுவது; பின்பு அதே கோணத்தில் விசாரணையை கொண்டு சென்று சில முஸ்லிம்களை கைது செய்வது; பின்னர் சில மாதங்களில், அல்லது சில ஆண்டுகள் கழித்து அந்த முஸ்லிமுக்கும் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று விடுவிப்பது.
 
ஒரு தீவிரவாத சம்பவத்தில் ஒரு முஸ்லிம் கைது செய்யப்படும்போது அதுபற்றி முகப்பு செய்தியில் போட்டு தமது முகத்தை காட்டும் பத்திரிக்கைகள், அதே முஸ்லிம் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படும் செய்தியை பத்திரிக்கையின் ஒரு மூலையில் கூட போடத் தயாரில்லை. அவன்  செய்யாத தவறுக்கு அடைந்த தண்டனையும், ஏற்பட்ட அவமானத்திற்கும் யார் நஷ்டஈடு தருவது? உதாரணத்திற்கு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்பது ஆண்டுகள் கழித்து குற்றமற்றவராக விடுதலை செய்யப்பட்ட மதானி தொலைத்த ஒன்பது ஆண்டுகால இளமையை, அவர் இழந்த வருமானத்தை, அவரும் அவரது குடும்பமும் பட்ட அவமானத்தை யார் சரிசெய்யமுடியும்?
 
ஆனால், இதற்கும் ஆஸ்திரேலியா முன்மாதிரியாக உள்ளது. டாக்டர் ஹனீபிடம் மன்னிப்பு கேட்டதோடு, உரிய இழப்பீடும் வழங்கியுள்ளது. இதேபோன்று இந்தியாவும் ஒரு வழக்கில் கைது செய்யப்படும் ஒருவன், அது சாதாரண பிட்பாக்கெட் வழக்காக இருந்தாலும், பெரிய பயங்கரவாத வழங்காக இருந்தாலும் அவன் குற்றமற்றவன் என்று விடுதலை  செய்யப்பட்டால் அவனிடம் சம்மந்தப்பட்ட துறையினர் மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும் அவனுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்டஈடு சம்மந்தப்பட்ட துறையினரிடமே வசூலித்து வழங்கவேண்டும். மேலும் அவனைப்பற்றி எந்த பத்திரிக்கையில் குற்றவாளியாக காட்டப்பட்டானோ, அதே பத்திரிக்கையில் அவன் குற்றமற்றவன் என்ற செய்தி இடம்பெறச் செய்யவேண்டும். அப்போதுதான் எடுத்தேன்-கவிழ்த்தேன் பாணி கைதுகளும், மததுவேஷ கைதுகளும், முன்விரோத கைதுகளும் குறையும். செய்யுமா இந்தியா?

ஊருக்குத்தான் உபதேசம்; இதுதான் பாஜக!

அரசுக்கு சொந்தமான இடங்களில், சாலையோரங்களில், மக்களுக்கு இடையூறாக பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் அதிலும் குறிப்பாக  திடீர் கோயில்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பெருகிய நேரத்தில், இவற்றை அகற்றவேண்டும் என்று 'ட்ராபிக்' ராமசாமி உள்ளிட்ட பலர் கோர்ட்டுகளில் பொதுநல வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஆக்கிரமிப்பு  வழிபாட்டுத்தலங்கள் அகற்றப்பட வேண்டும்  என்று கோர்ட்டு உத்தரவிட்டது மக்களுக்கு நினைவிருக்கலாம்.
 
நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுகையில் சொற்பமான அளவு தர்காக்களும்  இடிக்கப்பட்டன. சட்டத்திற்கு மதிப்பளித்து இவற்றை முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நடைபாதை கோயில்கள் அகற்றப்படும் போதெல்லாம் அங்கே பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் குறுக்கே நின்று, கோயில்களை இடிக்கவிடமாட்டோம் என்று கூக்குரலிடுவதை மக்கள் அறிவார்கள்.
 
உண்மையில் இந்துத்துவாக்கள்  இவ்வாறு செய்வதற்கு காரணம் கோயில்கள்  மீது கொண்ட பக்தி என்று அறியாத மக்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்பதற்கு ஒரு செய்தி.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலக வளாகத்திற்குள் உள்ள சிவன் - பார்வதி கோவிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அக்கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளது,  பாஜகவின்  தலைமை அலுவலக வளாகத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், சிறிய அளவில் சிவன் - பார்வதி கோவில் கட்டப்பட்டது.
 
அந்த அலுவலகத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புவாசிகள், தம்மால் முடிந்த அளவுக்கு சிறிய தொகையை திரட்டி, அந்த சிறிய கோவிலை கட்டினர். பின்னர், கடந்த 18 ஆண்டுகளாக, அங்கு வழக்கமான வழிபாட்டு நிகழ்ச்சிகளும், திருவிழாக்களும் நடந்து வருகின்றன. இவற்றை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களே செய்து வருகின்றனர். இந்நிலையில், அலுவலக வளாகத்திற்குள் பொதுமக்கள் கோவிலில் வழிபாடு செய்ய வருவதை, பாஜகவினர்  இடைஞ்சலாக கருதத் துவங்கியுள்ளனர். எனவே, அந்த கோவிலை அகற்றி, காம்பவுண்டுக்கு வெளியே கட்டிக்கொள்ளுமாறு அந்தப் பகுதி மக்களிடம் கூறியுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
 
மக்களுக்கு இடையூறாக நடைபாதையில் இருக்கும் இந்து கோவில் இடிக்கப்பட்டால் கூட, அதற்காக குய்யோ-முறையோ என்று கூப்பாடு  போடும்  பாஜக, தங்களுக்கு இடையூறாக  இருக்கிறது என்ற காரணம் கூறி, தங்களது அலுவலக வளாகத்திற்குள் உள்ள இந்து கோவிலையே அவர்கள் இடிக்க வேண்டும் என்று கூறியிருப்பது, அவர்களின் இரட்டை  வேடத்தை அம்பலப்படுத்துவதாக  உள்ளது. இவர்களின் இந்த பக்தி வேஷத்தை  மக்கள் புரிந்து கொண்டால் சரி!
 

ஆந்திராவை முன்மாதிரியாக கொள்வாரா ஜெயலலிதா..?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து ஓய்ந்துள்ளது. இந்த பெருமழையின் காரணமாக  உயிரிழப்புகள்- பொருள் இழப்புகளுக்கு உள்ளாகி நிற்கின்றனர் தமிழக மக்கள். அதிலும் குறிப்பாக வட்டிக்கடன்  வாங்கி வயலில் போட்டு, அது வாய்க்காலில் போனதால் வாடி நிற்கின்றனர் விவசாயிகள். தமிழக அரசு உடனடியாக மழைக்கால நிவாரனங்களுக்கென 600  கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. 
 
மேலும் வெள்ளச் சோதனைகளை  பார்வையிட வந்த மத்தியக்குழு, 1 ,832  கோடியை தமிழகத்திற்கு  மத்திய அரசு உடனடியாக ஒதுக்கவேண்டும் என்று கூறியுள்ளது. தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியும், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கப்போகும் நிதியும் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைந்தால்  நலமே. ஆனால் அதற்கு நேர்மாற்றமாக பலபேர் கையில் மாறும் ஐஸ்கட்டி கரைவது போல் கரைந்து, கடைசியில் சில துளிகளே மக்களுக்கு சென்றடைகிறது  என்பதுதான் மக்களின் புலம்பலாக உள்ளது.
 
இந்த நேரத்தில் அரசின் உதவித்தொகை மக்களை சென்றடைவதில் ஆளும்கட்சிக்கு எவ்வளவு அக்கறையிருக்கிறதோ அதே அளவு ஏன் அதையும் தாண்டி எதிர்கட்சிக்கு இருக்கவேண்டும். ஏனெனில், பாதிக்கப்பட்டவர்களில்  ஆளுங்கட்சிக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல. எதிர்கட்சிக்கு வாக்களித்தவர்களும், பொதுஜனங்களும்  உண்டு. எனவே வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் கூட முதல்வர் கருணாநிதி தான் என்பது எந்த அளவு உண்மையோ, அதேபோல் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஜெயலலிதாதான் எதிர்கட்சித் தலைவர்.
 
எனவே ஜெயலலிதா வெற்று அறிக்கையோடு நின்றுவிடக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் சென்றடைகிறதா  என்பதை அவரும், அவரது கட்சியினரும் நேரடியாக சென்று மக்களின் கருத்தறிய வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிவாரண நிதியை உடனே வழங்கிடுமாறு தனது கட்சி எம்.பி.க்கள் மூலம் பிரதமரை வலியுறுத்த  வேண்டும். மேலும் கூடுதல் நிதி பெற்று தமிழகத்திற்கு வழங்க முயற்சிக்கவேண்டும்.
 
ஏனெனில், அண்டை மாநிலமான  ஆந்திராவில் எதிர்கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு, வெற்று அறிக்கையோடு நின்று விடாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து  உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அரசியல் களம் கண்ட ஜெகன் மோகனும் கூட உண்ணாவிரதம் இருந்துள்ளார். இதெல்லாம் எதை காட்டுகிறது? உள்ளுக்குள் அரசியல் நோக்கம் இருப்பினும், மக்களுக்காக களமிறங்கினால் தான்  மக்களின் மனம் இறங்கும் அதன் மூலம் அவர்களின் வாக்குகளை பெறமுடியும் என்ற அரசியல் ராஜதந்திரத்தை கையாளுகிறார்கள்.
 
ஜெயலலிதா ஆந்திராவை முன்மாதிரியாக கொள்வாரா? அல்லது வெற்று அறிக்கை வெற்றியை பெற்றுத்தரும் என எண்ணி இறுமாந்திருப்பாரா  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அபகரிப்பு- மோசடி குறித்த மார்க்க விஷயங்கள் அண்ணனுக்கு பொருந்தாதா?

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...
எஸ்.எம். பாக்கரின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெயரை தனது குடும்ப உறுப்பினர்களை  கொண்டு, அபகரித்த 'அயோக்கியர் தி கிரேட்' அண்ணன் பீஜேயின் அபகரிப்பு- மோசடி பற்றி மார்க்க அடிப்படையில் சில ஆதாரங்களை  வைத்தோம். படிக்க; http://intjonline.in/1298.do

அதன் முடிவில்,
குறிப்பு; மேலே குறிப்பிட்டுள்ள குர்'ஆன் மற்றும் ஹதீஸ்கள் பொருள் சம்மந்தப்பட்டவை. நான் அபகரித்தது பாக்கரின் அமைபைத்தான்; அமைப்பு என்பது பொருள் அல்ல. எனவே முகவை மண்ணாங்கட்டி[!?] எடுத்து வைத்த வாதம் சரியல்ல என்று அண்ணன் வியாக்கியானம் தரலாம். அண்ணனின் வியாக்கியானத்திற்கு 'அல்லாஹு அக்பர்' போட தயாராக இருங்கள்.
என்று முடித்திருந்தோம்.

அல்லாஹ்வின் நாட்டப்படி நாம் கூறியது போலவே,  முகவை அப்பாஸ் ''மோசடி செய்யக்கூடாது என்று கூறும் குர் அன் வசனங்களை எடுத்துக் காட்டி தவ்றான இடத்தில் பயன்படுத்தியுள்ளார். என்று அண்ணன் கும்பல் புலம்பியுள்ளதோடு, கீழ் கண்ட வாதத்தையும் வைத்துள்ளது.

நாங்கள் பதிவு செய்தது சங்கம். நீ பதிவு செய்தது ட்ரஸ்ட். இரண்டுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இரண்டின் வகையும் வேறு. இரண்டின் பதிவு எண்ணும் வேறு. இரண்டின் பெய்ரும் வேறு
ஒன்று  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
இன்னொன்று  இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ட்ரஸ்ட்
இப்படி  இருக்கையில் மோசடி என்று திசை திருப்புவதை விட்டு விட்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி மானத்தை காப்பாற்றிக் கொள்.
என்று கூறியுள்ளனர்.
 
டிரஸ்ட்- சங்கம் என்று தேய்ந்த ரிக்கார்டாக திரும்ப திரும்ப புலம்ப வேண்டாம். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இரு ஆண்டுகளுக்கு முன் அமைப்புத் தொடங்கியது பாக்கரா? அல்லது பொய்யர் பீஜே கும்பலா?
 
அந்த பெயரில் நேற்று [எட்டு மாதத்திற்கு முன்] கள்ளத்தனமாக பதிவு செய்து விட்டு, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்   எனும் பெயரை எங்களைத் தவிர வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதி மன்றத்தில் தடையாணை  பெற்றது மோசடியா இல்லையா?
 
பாக்கரோடது டிரஸ்ட்- என்னோடது சங்கம். அது வேறு இது வேறு என்று கூறும் பொய்யர் கும்பல், தங்கள் கூற்றில் உண்மையாளர்கள் என்றால், குறைந்த பட்சம் பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்ற பெயரில் செயல்பட கோர்ட் உத்தரவிட வேண்டும் என்றல்லவா வழக்கு தொடுத்திருக்க வேண்டும்? அதை விடுத்து நேற்று கள்ளத்தனமாக பெயர் வைத்துக்கொண்டு, உண்மையான உரிமையாளன் அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது  என்று தடையாணை  பெறுவது மோசடி இல்லையா?
 
மேலும், தடையாணையை காட்டி, அல்லாஹ்வின் ஆலய மீட்பு போராட்டமான பாபர் மஸ்ஜித் போராட்டத்தை காவல்துறை மூலம்  கெடுக்க நினைத்தது மோசடி இல்லையா?
 
மேலும் பெயரை களவாடியதோடு, பாக்கரின் அமைப்புக்கு சொந்தமான கலரை பயன்படுத்தியதும்,  போஸ்டர் அடித்ததும், அதில் பாக்கர் கொடியை போட்டதும் மோசடி இல்லையா?
 
இப்படி அடுத்தவன் அமைப்பை அபகரித்ததோடு , அடுக்கடுக்கான மோசடி செய்யும் அயோக்கியர் தி கிரேட் கும்பல், அபகரிப்பு- மோசடி தொடர்பான ஆதாரங்கள் தனக்கு பொருந்தாது என்பது விந்தைதானே!  ஆமாம்! அவர்களுக்கு தேவை எனில், அப்பாவி மக்களின் காசை கோடிக்கணக்கில் கொட்டி வல்லத்தில் பள்ளம் தோண்டிய மாநாடு குறித்த கேள்விக்கு மக்கா வெற்றி பற்றிய ஹதீஸ் பொருந்தும். ஆனால் அபகரிப்பும்- மோசடியும் அவர்களே செய்திருந்தாலும் அதுபற்றிய ஆதாரம் மட்டும் அவர்களுக்கு பொருந்தாது. எல்லாம் தக்லீதின் தாக்கம்தான்.

கொடியை காட்டி குறம்பாடும் கொள்ளை[கை]க்குன்றுகள்....?

அல்லாஹ்வின்  அழகிய திருப்பெயரால்...
எஸ்.எம். பாக்கரின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின்  பெயரை கள்ளத்தனமாக குடும்ப
உறுப்பினர்களின் மூலம் அபகரித்த 'அயோக்கியர் தி கிரேட்' அண்ணன் கும்பல்,
தங்கள் களவாணித்தனத்தை நியாயப்படுத்த வைக்கும் மற்றொரு வாதம், ததஜ
எனும் தக்லீத் ஜமாஅத்தின் கொடி போன்றே பாக்கரும் தனது அமைப்புக்கு
கொடியை உருவாக்கி மக்களை குழப்பினார் என்று கூறி குறம்பாடுகின்றனர்.
அவர்களின் கள்ளச்சங்கத்தின் கள்ள வெப்சைட்டில் வந்துள்ள செய்தி கீழே;  
 
சரி பெயரில் தான் குழப்பமா என்று பார்த்தால் நாட்டில் எத்தனையோ
கலர் இருக்கிறது அவர்கள் வைத்த கொடிக்கலரும் TNTJ கொடிக்கலரும் 
 பச்சை, வெள்ளை, கறுப்பு மாதிரி பச்சை கறுப்பு கலரைத் தேர்ந்தெடுத்தனர்.
இந்த பொய்யன் கூட்டம் அப்போதாவது இந்த கூட்டம் ஏன் காக்கா அந்த
கொடிக் கலர் மாதிரியே இருக்கு இது குழப்பம் வரும் நம்ம வேறு கலர்
வைக்கலாம் என்று சொன்னார்களா? இந்த அடிமைகள் அதுவும் இல்லை!
என்று எழுதியுள்ளனர்.
 
இவ்வாறு புலம்பும் பொய்யர் பீஜே கும்பல் தங்கள் கூற்றில் உன்ன்மையாளர்கள்
என்றால் தமுமுகவில் இருந்து பிரிந்து தொடங்கப்பட்ட தக்லீத் ஜமாஅத்தின் கொடி
எந்த வகையிலும் தமுமுக சாயலில் இருக்கக் கூடாது  என்ற அடிப்படையில்
உருவாக்கியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
தமுமுகவின் கொடி கருப்பு அதற்கு கீழே வெள்ளை. தக்லீத் ஜமாஅத், அதை
அப்படியே புரட்டிப்போட்டு மேலாக பச்சையை கூடுதலாக சேர்த்து  நடுவில் வெள்ளை
கீழே கருப்பு என்று வடிவமைத்தார்கள். [அதுவும் அடுத்தவர்  கொடி; அவர்  
விட்டுக்கொடுத்ததால் இவர்கள் மானம் தப்பித்தது என்பது தனி விஷயம்] பார்க்க
படம்;
தமுமுக கொடி

ததஜ கொடி

ததஜவுக்கு பின்னால், பாக்கர் உருவாக்கிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வெள்ளையை நீக்கி விட்டு கருப்பு பச்சை[ ததஜ பச்சையிலிருந்து   வேறுபட்ட பச்சை பார்க்க படம்;
பாக்கரின் இதஜ கொடி
கொடியை உருவாக்கியதை குறைகாணும் இந்த தக்லீத் கூட்டம் , அன்றைக்கு தமுமுக போன்று கருப்பு வெள்ளையை தேர்ந்தெடுத்து அதில் பச்சையை கலந்தபோது, அண்ணே! தமுமுக  கொடிக் கலர் மாதிரியே இருக்கு இது குழப்பம் வரும் நம்ம வேறு கலர் வைக்கலாம் என்று பீஜேயிடம் சொன்னார்களா? இந்த அடிமைகள் என்றால்  இல்லை.
இதன் மூலம் நாங்கள் செய்தால் தவறல்ல. அதையே  மற்றவன் செய்தால் மாய்ந்து மண்ணில் புரண்டு அழுவோம் என்பது சின்னப்புள்ளத்தனமா தெரியலையா  இந்த தக்லீதுகளுக்கு?
 
மேலும், ஒரு அமைப்பிலிருந்து பிரிந்தவர்கள், தங்களின் தாய் அமைப்புக் கொடியை ஒட்டியே கொடி உருவாக்குவது அரசியல் அரங்கிலும், சமுதாய அமைப்புகளிலும் புதிய ஒன்றல்ல. உதாரணத்திற்கு தாய்ச்சபையாம் முஸ்லிம்லீக்  கொடியும், அதிலிருந்து பிரிந்த தேசிய லீக் கொடியையும் பாருங்கள்;
முஸ்லிம் லீக் கொடி
தேசிய லீக் கொடி
இரண்டும் பச்சைதான், தேசிய லீக் சற்றே வெளிறிய பச்சை. ஆனால் அருகில் இருந்து பார்த்தால்தான் வித்தியாசம் தெரியும். இரண்டு கொடியிலும் பிறை உண்டு. ஒன்றில் நட்சத்திரம் மைனஸ். ஆனாலும் ஏறக்குறைய 98 சதவிகித ஒற்றுமை இரண்டுக்கும் உண்டு. ஆனாலும் தாய்சபை முஸ்லிம் லீக், இவர்களைப்  போல் தேசிய லீக் அமைப்பை களவாட முயற்ச்சிக்கவும் இல்லை; அதற்கு ஆதாரமாக கொடியை காட்டி நொண்டிச்சாக்கு சொல்லவுமில்லை. ஏனெனில் அவர்கள் நிறைகுடங்கள். அதாவது சிந்திக்கும் திறனுடையவர்கள்.
 
அப்படியாயின் இவர்கள்.......?  நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

27 December, 2010

யார் கூ முட்டைகள்...?

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பத்தில் ஆங்கில சுருக்கெழுத்தாக itj என்று போட்டு வந்தது. பின்பு ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தினர் itj என்று குறிப்பிடுவதால், intj  என்று  போட்டு வருகிறது இந்திய தவ்ஹீத் ஜமாஅத். இது ஏதோ தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத்தின் tntj எனும் வார்த்தையைப்  போன்று இருக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் செய்ததாக ஒரு பொய்யை 'அயோக்கியன் தி கிரேட்' அண்ணன் கும்பல் பரப்பி வருகிறது. அவர்களின் கள்ள சங்கத்தின் கள்ள வெப்சைட்டில் அவர்கள் எழுதியதை பாருங்கள்;

நாமும் தவ்ஹீத்வாதி தான் என்று அடையாளம் காட்ட வேண்டும் அப்போது தான் இந்த அப்பாவி மக்களை ஏமாற்ற முடியும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் .. மாதிரியே .. என்று பெயர் வைத்தனர்.
மக்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தனர். இந்த பொய்யன் பாக்கர் கும்பல் பெயரில் அபகரிப்பு ITJ என்று போட வாய்பு இருந்தும் TNTJ என்கிற மாதிரி INTJ என்று போட்டு மக்களை ஏமாற்றினர்
இன்றைக்கு ஆ, ஊ என்று கத்தும் பொய்யன் கூட்டம் பொய்யன் பாக்கரிடம் ஏன் காக்கா ITJ னு தானே வரும் ஏன் INTJ என்று போட்டீர்கள் என்று கேட்க கூட  தெரியாத கடைத்தெடுத்த கூமுட்டைகளாக இருக்கிறார்கள்? என்று எழுதியுள்ளார்கள்.
 
சகோதரர்களே! இவர்கள் கூற்றில் உண்மையாளர்கள் என்றால், ஒரு வாதத்திற்கு நாங்கள் செய்ததை தவறு என்று சுட்டிக்காட்டும் இவர்கள் அதை செய்யாமல் இருக்கவேண்டுமல்லவா? ஆனால் அவர்கள் தங்கள் கள்ள சங்கத்தின் சுருக்கெழுத்தாக எங்களைப் போன்றே intj என்றே போட்டுள்ளதை பாருங்கள்;


இப்போது சொல்லுங்கள் யார் கூ முட்டைகள் என்று..?
இதைத்தான் மாமியார் உடைத்தல் மன்சட்டி; மருமகள் உடைத்தல் பொன் சட்டி என்பதோ..?


26 December, 2010

கனிமொழி சந்திப்பும்; கள்ளபெயரில் பீஜேயின் உளறலும்!

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...

''அறுபத்தி ஆறு கேள்விகளுக்கு பதில் என்ற பெயரில் அர்ச்சனையை தொடங்கிய அண்ணன் அதையும் முழுமையாக்காமல், இலங்கை தவ்ஹீத் மவ்லவி  முஜாஹித் விஷயத்தில் செய்த தாதாயிசம் குறித்து எங்கள் சகோதரர் அப்துல் முஹைமின் வைத்த குற்றச்சாட்டு பற்றி மூச்சுவிடாமலும், ''கமிஷனர் அலுவலகத்தில் கள்ளச்சங்கம் சார்பாக கொடுக்கப்பட்ட புகார் மனு பற்றியும் அதையொட்டி வைக்கப்பட்ட வாதத்திற்கும்  [மனுவை தமிழாக்கம் செய்து வெளியிட்ட பின்னாலும்] வாய் திறக்காமலும், ''எனது வண்டவாளத்தை  வெளியிடு, நான் உணர்வு அலுவலகத்திற்கே வந்து நிரூபிக்கிறேன்'' என்று வாய்மையோடு சவால்விட்ட  அபூபைசல் விஷயத்தில் ஆப்பசைத்த குரங்காகவும்  இருந்து வரும் அண்ணன் வழக்கம்போல மற்றொரு கள்ளப்பெயரில், பொய்யன் [பீஜே] டிஜே எனும் கள்ள தளத்தில் கனிமொழியுடன் எங்கள் அமைப்பு நிர்வாகிகள் நடத்திய சந்திப்பு குறித்து கருவுகிறார். கதறுகிறார். அதுபற்றிய சிறு விளக்கம்;

இயக்கம் நடத்துபவர்கள் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கோரிக்கை வைப்பதும் எல்லா இயக்கங்களிலும் உள்ள நடைமுறைதான். அதை யாரும் குறை கூற முடியாது. ஆனால் பொய்யன் பாக்கர் ட்ரஸ்டின் உறுப்பினரான முனீர் கனிமொழி அவர்களைச் சந்தித்து இட ஒதுக்கீடு குறித்து கோரிக்கை வைத்ததாக ஒரு செய்தியை பொய்யன் இணயதம் துணுக்குச் செய்தியை வெளியிட்டுள்ளது
அந்தச் செய்தி இது தான்
இடஓதுக்கீடு சம்பந்தமாக தமிழக முதல்வர் அவர்களின் மகளும், பாராளுமன்ற மாநிலவை உறுப்பினர் கனிமொழி அவர்களை சந்தித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத் தலைவர் முஹம்மது முனீர் அவர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தார்
அத்துடன் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
என்று எழுதியுள்ளார் பொய்யர் பீஜே.

எங்களது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் இவ்வாறு மட்டும் சுருக்கமாக உள்ளது உண்மைதான். அதை நாங்கள்  மறுக்கவில்லை. ஆனால் பொய்யர் பீஜே அடுத்தவர் அந்தரங்கத்தை அறிவதற்காக ஆயிரம் தளங்களுக்கு செல்வதில் காட்டும் கவனத்தில் இருந்து கடுகளவு இந்த செய்தியின் உண்மை நிலையை அறிவதில் செலுத்தியிருந்தால்  முழு செய்தியும் கிடைத்திருக்கும். அவர் நோக்கம் செய்தி அறிவதில்லையே! எதிரியை செல்லாக் காசாக்குவதுதானே! இப்ப விஷயத்திற்கு வருவோம். எங்கள் மாநிலச்செயலாளர் செங்கிஸ்கான் அவர்களின் இணையதளத்தில் கனிமொழி சந்திப்பு குறித்த விபரங்கள் உள்ளன. அது கீழே;

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் முஹம்மத் முனீர் மற்றும் ,மாநில செயலாளர் வேளச்சேரி சிராஜ் ஆகியோர் , மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும் ,
முதல்வரின் மகளுமாகிய கனிமொழி எம்.பி.யை சந்தித்து சமுதாயத்திற்கான பல் வேறு
 கோரிக்கைகளை   வலியுறுத்தினர்.
முக்கியமாக மத்தியில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு குறித்து இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது! மேலும் வேளச்சேரி முஸ்லிம்களின் கோரிக்கையான அடக்கஸ்தலம் பற்றியும் வலியுறுத்தினர். கவனமாக அனைத்தையும் கேட்ட கனி மொழி
தந்தையும் ,தமிழக முதல்வருமான கலைஞரிடத்தில் இது குறித்து பேசுவதாக கூறினார்.

சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு நம்பிக்கை அளித்ததாக வேளச்சேரி கபர்ஸ்தான் கூட்டுக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்
.
மேலும், இணையதளத்தில் சுருக்கமான தகவலை தந்த நாம், கனிமொழியுடனான சந்திப்பு குறித்த பொய்யரின் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவு கிடைக்கும் வகையில், எமது சமுதாய மக்கள் ரிப்போர்ட்டரில் தலைப்பு செய்தியாகவே வெளியிட்டுள்ளோம். பார்க்க இங்கே கிளிக் செய்க; http://4.bp.blogspot.com/_m25dsPmYwkI/TRRv_6Pn8YI/AAAAAAAAAGc/H-UfvHK0sgk/s1600/page-1.ஜபக் 

இணைய தளங்களில் சுருக்கமாக போடுவதும்,  பத்திரிக்கையில் விரிவாக போடுவதும் 
பொய்யர் பீஜேயும் செய்துவரும் வழமைதான். இதில் ஏதோ பாராதூரமாக கண்டுபிடித்தது  போன்று ஃபில்டப் காட்டுவதும் அவரது வழமைதானே!

அடுத்து
ஒரு இயக்கத்தின் சார்பில் சந்திப்பது என்றால் அந்த இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் இடம் பெற வேண்டும். நிர்வாகிகள் அல்லாதவர்கள் இது போன்ற சந்திப்புகளில் அழைக்கப்படக் கூடாது. என்கிறார் பொய்யர் பீஜே.

நாம் அவரிடம் கேட்பது,  இட ஒதுக்கீடு தொடர்பாக, அப்போது ததஜவில் மாநில நிர்வாகியாக இருந்த இதே முனீர் அவர்கள், இதே கனிமொழியை சந்தித்து மனு கொடுத்தபோது, முனீருடன் சென்றவர்கள் அத்தனை பேரும் மாநில நிர்வாகிகள்தான் என்று பீஜே நிரூபிக்கத் தயாரா?

இந்த புகைப்படத்தில் இருக்கும் முதியவர் யார்? என்று மில்லியன் டாலர்[?] கேள்வியை கேட்டு மிடறு விழுங்குகிறார் பீஜே.
அந்த முதியவர் யார் என்றால் உங்களால் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்ட வேளச்சேரி மையவாடி பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க வந்த பரியல்கிரவுண்டு கமிட்டியை சேர்ந்த சகோதரர் ஆவார்.
பாதி வெட்டப்பட்டுள்ள இன்னொருவர் யார்? என்று விளங்காமல் கேட்கிறார் பீஜே. இவர் யார் என்றால் எங்கள் அமைப்பின் மாநிலச்செயலாளர் வேளச்சேரி சிராஜ் ஆவார்.

அடுத்து
மத்தியில் இட ஒதுக்கீடு என்றால் பிரத்யேகமாக கனி மொழியை சந்திக்கும் அவசியம் என்ன? என்று கேட்டு தனது ஆற்றாமையை  வெளிப்படுத்துகிறார் அண்ணன்.

மத்தியில் இடஒதுக்கீடு குறித்து கனிமொழியை சந்தித்ததற்கு காரணம், அவர் மாநிலங்களவை உறுப்பினர். இடஒதுக்கீடு  குறித்து பாராளுமன்றத்தில் பேசும் இடத்தில் இருக்கிறார். எனவே அவர் மூலம் பாராளுமன்றத்தில்  இடஒதுக்கீடு தொடர்பாக குரல் எழுப்ப கேட்டுக்கொண்டோம்.

அதெல்லாம் சரிண்ணே! நீங்க அன்றைக்கு  முனீரை அனுப்பி கனிமொழியை சந்திச்சு பேச வைச்சீங்களே! அப்ப மட்டும் கனிமொழி தமிழக முதல்வராக இருந்தாங்களாக்கும்?

அன்பான சமுதயாமே! அண்ணனின் சமீபத்திய உளறல்கள், மலை உச்சியிலிருந்து விழுபவன் தன் கைக்கு கிடைத்த கிளையை  பிடித்தவுடன் நினைத்தானாம் நாம் பிழைத்துக் கொள்வோம் என்று! ஐயோ பாவம்! அவன் பிடித்தது முருங்கை கிளை என்று பின்னர் தான்  தெரிந்ததாம். அதுபோல் அண்ணன் கண்டதைப்  பிடித்து கரையேறப் பார்க்கிறார். அது கனவிலும் நடக்காது இன்ஷா அல்லாஹ்.

25 December, 2010

பேச்சுக்கு செயல்வடிவம் தருவாரா அல்தாஃபி...?

சமீபத்தில் குடந்தையில் 40 பாதிரியார்களுடன்  நடந்த கலந்துரையாடலில் பேசிய ததஜ மாநிலத்தலைவர் சகோதரர் அல்தாஃபி,

''இறைத்தூதர் நபிகள்  நாயகம்[ஸல்] அவர்கள் தனது இறுதிப் பேருரையில்,
அடுத்தவருடைய  மானம், மரியாதை, பொருள்,உடமைகள்  மற்றவருக்கு ஹராம். என்று கூறிச் சென்றுள்ளார்கள். ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடமைகள் அனைத்தும் புனிதமானவை. அந்த புனிதம் பேணப்படவேண்டும் என்றும் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள் என்று பேசியுள்ளார்.[உணர்வு டிச 24 -30 ]

உண்மையில் சகோதரர்  அல்தாஃபி இந்த பொன்மொழியை பயன்படுத்தும் தகுதி தனக்கு  உண்டா என்று  சிந்திக்கவேண்டும்.

  • தனக்கு எதிராக ஒருவன் கிளம்பாதவரை அவன் பற்றி வாய் திறக்காத பீஜே, தனது   அநீதியை எதிர்க்க ஆரம்பித்தவுடன் அவனது மானத்தை ஏலம் போடும் பீஜேயின் செயலை அல்தாஃபி கண்டும் காணாமல்  இருக்கும் வரை இந்த பொன்மொழியை பற்றி பேச தகுதியுண்டா?

  • தன்னை எதிர்ப்பவர்களின்  மரியாதையை   சமுதாயத்தில் சீர்குலைப்பதையே அழைப்புப் பணியாக செய்யும் பீஜேயை கண்டிக்காதவரை இந்த பொன்மொழியை பயன்படுத்தும் தகுதி அல்தாஃபிக்கு உண்டா?

  • அடுத்தவனுடைய உடமையை தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கள்ளத்தனமாக பதிவு செய்து, அதை தக்கவைப்பதற்காக சமுதாயத்தின் பணத்தை கோர்ட்டில் வாரி இறைக்கும் பீஜேயின் செயலை கண்டிக்காதவரை இந்த பொன்மொழியை பயன்படுத்தும் தகுதி அல்தாஃபிக்கு உண்டா?


இப்படி இறைத்தூதர்[ஸல்] அவர்களின் கட்டளையை துச்சமென கருதி, அடுத்தவனுடைய மானம், மரியாதை, உடமை, ஆகியவற்றில் தொடர்ந்து விளையாடும் பீஜெயிக்கு  தலைவர்  என்ற முறையில் அல்தாஃபி,அவர் மீது நடவடிக்கை எடுத்து காட்டிவிட்டு  பின்னர் இந்த பொன்மொழியை பேசட்டும். அல்லது பீஜேயின் இந்த அயோக்கியத்தனத்திற்கு நானும், எனது தலைமையில்[!?] இயங்கும் ததஜவும்  முழு உடந்தை என்றாவது பகிரங்கமாக அல்தாஃபி அறிவிக்கட்டும்.
 
இல்லையேல், தனது தலைமைப் பொறுப்பு பற்றி அல்லாஹ்வின் விசாரணைக்கு  அவர் அஞ்சிக்கொள்ளட்டும். மேலும் பேச்சுக்கும்- செயலுக்கும் சம்மந்தமில்லாதவர்கள் ததஜவினர் என்ற விமர்சனத்திற்கும் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ளட்டும்.

24 December, 2010

சகோதர அமைப்புகளை பயங்கரவாத அமைப்பு என்று ததஜ சொன்னதில்லையா?

திருவிடைச்சேரி படுகொலையை முன்னிட்டு 19 அமைப்புகள் சார்பாக, பிரச்சினையில் தொடர்புடைய ததஜ அமைப்பினர் மீது நடவடிக்கை கோரும் போஸ்டர் ஒட்டப்பட்டதை அனைவரும் அறிவோம். அந்த போஸ்டர் ஒட்டப்பட்ட மாத்திரமே பொங்கிஎழுந்த தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத்தினர் கீழ்கண்ட போஸ்டரை ஒட்டினர்;

அந்த  போஸ்டரில் சகோதர்கள் பாக்கர் மற்றும் ஜவாஹிருல்லாஹ்வை  தீவிரவாதிகள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சக முஸ்லிம் அமைப்பான பாப்புலர் பிரன்ட் ஐ பயங்கரவாத அமைப்பாகவும் சித்தரித்து தங்களின்  வெறியை  காட்டியிருந்தனர்.

இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு கொஞ்ச நாள் கழிந்துவிட்டதால் மக்கள் இதை மறந்திருப்பார்கள் என்று கருதிய பீஜேயின் தக்லீதுகள் புதுக்கதை ஒன்றை உணர்வில் ''நாடும் நடப்பும்'' பகுதியில் எழுதியுள்ளார்கள்;

'' நான் என்ன சொல்ல வருகிறேன்னா அந்த 19 அமைப்புகளில் ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்புன்னு ஒரு பேப்பர்ல போட்டிருக்காங்க என்ற பாருக்,
எந்த இயக்கமாக இருந்தாலும் அவை செய்யும் தவறுகளை தவ்ஹீத் ஜமாத்தினர் சுட்டிக்காட்டுவார்கள். முஸ்லிம் இயக்கம் என்று பெயரை வைத்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு துரோகம் செய்வதை சொல்லி மக்களிடத்தில் அவர்களை அடையாளம் காட்டுவார்கள். ஆனால் அது பயங்கரவாத அமைப்பு என்றோ அந்த அமைப்புகளால் நாட்டுக்கு கேடு என்றோ அவர்களை கைது செய் என்றோ அவர்கள் சொன்னதில்லை.
 [உணர்வு 24 -30 பக்கம் 20 ]
இவர்கள் உணர்வில் சொல்லியுள்ளது போன்று உண்மையாளர்களா என்பதை கீழே உள்ள போஸ்டரை பார்த்து 'இறையச்சத்துடன்' முடிவு செய்யுங்கள்;

என்னாது பள்ளிவாசலில் பொதுக்கூட்டமா?; நல்லத்தான் சுத்துராய்ங்க ரீலு!

ஒரு நிகழ்ச்சி அது நடத்தப்படும் இடத்திற்கேற்ப உள்ளரங்கு நிகழ்ச்சி- தெருமுனை கூட்டம்- பொதுக்கூட்டம்-மாநாடு இப்படி அழைக்கப்படும். அதிலும் குறிப்பாக பொதுக்கூட்டம் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்துள்ளோம். நமது நாட்டில் பொதுக்கூட்டம் நடத்தப்படுவது போன்று அரபகங்களில் குறிப்பாக குவைத்தில் நினைத்தவரெல்லாம் நடத்திட முடியாது. குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரே ஒவ்வொரு பகுதியிலும் 'டென்ட்' [கூடாரம்]அடித்து அந்த டெண்டிற்குள் தான்  தனது பிரச்சாரத்தை  செய்யமுடியும். இந்நிலையில்,

தற்போது அண்ணன் ஜமாஅத்தின் பிரச்சார ஏடாக இருக்கும் உணர்வில் ஒரு செய்தி; ''குவைத்தில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்'' என்ற தலைப்பில், ரவ்தா டி.என்.டி.ஜே கிளை சார்பாக கடந்த 17 -12 -2010  வெள்ளிக்கிழமை  மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி ரவ்தா கத்தா 5 ல் நடைபெற்றது என்றும் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டனர் என்றும் அந்த செய்தி கூறியது.

நமக்கு ஆச்சர்யம்! என்னப்பா இது! மண்ணின் மைந்தர்களே பொதுக்கூட்டம் போட்டு பேசமுடியாத நாட்டில் அண்ணன் ஜமாஅத் பொதுக்கூட்டமா? என்று. சரி! 'போட்டோவ பாப்பமே'ன்னு பார்த்தா அப்பத்தான் தெரியுது இது ''தீவுத்திடல் பார்முலா'ன்னு.
என்ன புரியலையா? ஐம்பதாயிரம் பேர் கொள்ளளவு கொண்ட தீவுத்திடலில் பதினைந்து லட்சம் பேரை[?] அமரவைத்துக் காட்டிய கதை  போன்று,

மேற்படி நிகழ்ச்சி பள்ளிவாசலில் நடந்துள்ளது. அதற்கு அவர்கள்  பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள போட்டோவே சான்றாக உள்ளது. ஆனாலும் அது மாபெரும் பொதுக்கூட்டம் என்று செய்தி போடுகிறார்கள் என்றால், பள்ளிவாசலில் நடந்ததை பொதுக்கூட்டம்  என்று உலகத்திலேயே சொன்னவர்கள் இவர்களாகத்தான் இருக்கும். என்ன  செய்ய..? என்னத்த சொன்னாலும் தலையாட்டுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும்போது கடுகையும் பெரு மலையாக காட்டலாம். கட்டெறும்பையும்  கருஞ்சிறுத்தையாகவும் காட்டலாம். ஆனாலும் இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் குவைத் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சியால்  அவர்கள்  தூக்கம் கெடுவதுதான் அவர்களை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பதுதான் உண்மை. 

புகழ்  அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

அபகரிப்பும்- மோசடியும்!



بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
மனிதகுலத்திற்கு நேர்வழி  காட்டவந்த  வேதமாம் திருக்குர்'ஆனிலிருந்தும் , அந்த திருக்குர்'ஆனுக்கு விளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி[ஸல்] அவர்களின் பொன்மொழியிலிருந்தும் அடுத்தவர் பொருளை அபகரித்தல் மற்றும் அடுத்தவருக்கு மோசடி செய்தல் பற்றிய சில எச்சரிக்கைகள்  'சிந்தனையாளர்களின்' சிந்தனைக்கு;
 
அடுத்தவர் பொருளை அபகரிக்க அதிகாரிகளிடம் நெருங்காதீர்;
அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.[2:188 ]
 
தனது பண வலிமையைக் காட்டியோ, அதிகாரத்தைக் காட்டியோ  அடுத்தவர்கள் பொருளை அடையலகாது என்று மேற்கண்ட வசனம் கட்டளையிடுகிறது. ஆனால் அநியாயமாக அநியாயக்கார பீஜே,  பாக்கரின் இதஜ வை அபகரித்ததோடு அதை தக்க வைப்பதற்காக, அழைப்புப்பணிக்காக அரபகங்களில் இருந்து அன்றாடம்காய்ச்சிகள் அரும்பாடுபட்டு அனுப்பிய காசை வழக்கில் கரைக்கிறார். அதோடு நம்மையும் கோர்ட்டுக்கு செலவழிக்கும்  நிர்பந்தத்திற்கு தள்ளுகிறார் என்றால் இவர்தான் தவ்ஹீத்வாதியா? சிந்திக்கவேண்டுகிறோம்.  
 
அனாதைகளின் பொருளாக இருந்தாலும் 'ஆட்டயப் போடலாகாது;
நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்;. நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.[4 ;2 ]
 
அனாதைகள் உடமைகள்தானே; பலவீனர்களின் உடமைகள்தானே என்று பறித்துக்கொள்ளலாகாது என்று பறைசாற்றுகிறது மேற்கண்ட வசனம். ஆனால் இந்த இறைக்கட்டளைக்கு மாற்றமாக, ஏற்கனவே தான் நடத்திவரும் தமிழ்நாடு தக்லீத் ஜமாஅத்துடன் இதஜவையும் அபகரித்து ஆட்டயப்போட நினைப்பவர்தான் தவ்ஹீத்வாதியா? சிந்திக்கவேண்டுகிறோம்.
 
விட்டுக் கொடுத்தாலே தவிர அடுத்தவர் பொருளை எடுக்கலாகாது;

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.[4 ;29 ]

எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.[4 ;30 ]

பொருந்திக் கொண்டு சம்மந்தப்பட்டவர் விட்டுக்கொடுக்கும் உடமைகள் நீங்கலாக, மற்றவர்களின் உடமைகளை உண்ணலாகாது என்று உச்சத்தலையில் அடித்து உணர்த்துகிறது மேற்கண்டவசனம். அத்துடன் அல்லாஹ்வின் வரம்பை மீறி அடுத்தவர் பொருளை ஆட்டையப் போடுபவரை நரகநெருப்பில் நுழைவிப்போம் என்றும் எச்சரிக்கிறது இறைவேதம்.

 மோசடி செய்பவர்களுக்கு உதவுபவர்களையும் சேர்த்து எச்சரிக்கும் வசனங்கள்;

(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்;. எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.  (4:105)

(தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்  மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.  (4:106)

ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.  (4:107)

இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்;. ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது. ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.  (4:108)

(முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?  (4:109)

அடுத்தவர் பொருள் விஷயத்தில் அல்லாஹ்வுக்கு அஞ்சிய முன்னோர்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

(பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், 'என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை" என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், 'நிலததை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)" என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், 'உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், 'எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்" என்று கூறினார். மற்றொருவர், 'எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது" என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், 'அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள்.  அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்" என்று தீர்ப்பளித்தார்.[புகாரி எண்; 3472 ]

இந்த பொன்மொழியில், நிலத்தை வாங்கியவர் நினைக்கிறார். வெறும்  நிலத்தை மட்டுமே வாங்கினோம். அதற்குள்ளே உள்ளே இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கத்தின்  மீது நமக்கு உரிமையில்லை என்று எண்ணி அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக அந்த பொருளை நிலத்தை வாங்கியவரிடம் திருப்பித் தர முனைகிறார். நிலத்தை விற்றவரோ நிலத்தை அதிலிருப்பவற்றுடன்  சேர்த்துதான் விற்றேன். அதிலுள்ளவை உமக்குத்தான் சொந்தம் என்று கூறி பொருளை வாங்க மறுக்கிறார். இந்த இரு நல்லடியார்கள் வாழ்வின் மூலம் அடுத்தவர் பொருள் விஷயத்தில் எந்த அளவுக்கு இறையச்சம்  தேவை என்பதற்கு சிந்திக்கும் மக்களுக்கு படிப்பினை உள்ளது. நிலத்திற்கு அடியில் உள்ள பொருள் விஷயத்தில் அஞ்சிய சமுதாயத்தின் வழிவந்தவர் என்று கூறிக்கொள்ளும் பீஜே, நிலத்திற்கு மேலே இரண்டாண்டுகளாக பாத்தியதை செய்துவரும் பாக்கரின் அமைப்பை ஆக்கிரமிப்பதுதான் தவ்ஹீதா? சிந்திக்க வேண்டுகிறோம்.

குறிப்பு; மேலே குறிப்பிட்டுள்ள குர்'ஆன் மற்றும் ஹதீஸ்கள் பொருள் சம்மந்தப்பட்டவை. நான் அபகரித்தது பாக்கரின் அமைபைத்தான்; அமைப்பு என்பது பொருள் அல்ல. எனவே முகவை மண்ணாங்கட்டி[!?] எடுத்து வைத்த வாதம் சரியல்ல என்று அண்ணன் வியாக்கியானம் தரலாம். அண்ணனின் வியாக்கியானத்திற்கு 'அல்லாஹு அக்பர்' போட தயாராக இருங்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.


அயோக்கியன் தி கிரேட்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


அன்புள்ள இனையத்தள வாசகர்களுக்கு...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மார்கத்திற்கு விரோதமாக,அல்லாஹ்வின் பயமில்லாமல்,காவல் துறைக்கு அண்ணன் & கோவினர் அனுப்பிய புகார் மனுவின் நகலை இதுவரை நாம் கேட்டபடி உணர்வு இதழில் வெளியிடாததால் அண்ணனும் அவரைச் சார்ந்தவர்களும் (அவர்களின் மாநில நிர்வாகிகளும், கள்ள சங்கத்தினரும் மட்டும்) அயோக்கியர்கள் என்று பிரகடனப்படுத்திவிட்டு,அந்த புகார் மனுவை நாம் வெளியிடுகிறோம்.

அதற்கு முன்னர், இந்த விஷயம் தொடர்பாக சகோ.முகவை அப்பாஸ் கேட்ட கேவிகளுக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில்..முகவை அப்பாசை மண்ணாங்கட்டி என்று விமர்சித்துள்ளனர். உண்மையில் யார் மண்ணாங்கட்டி என்று நாம் பார்த்துவிட்டு, பிறகு நமது விஷயத்திற்கு வருவோம்.

இட ஒதுக்கீட்டின் கனியை முஹம்மது (பீ.ஜெ.யின் மகன்) பறித்துக் கொடுத்தாரா என்றும், இவர் தலைமையிலான சங்கம் ரத்ததான முகாம்களை நடத்தி விருதுகளை பெற்றுக்கொடுத்ததா என்றும் முகவை அப்பாஸ் கேட்டிருந்தார்.அதற்கு அவரை மண்ணாங்கட்டி என்று விமர்சனம் செய்துவிட்டு,அந்த விஷயம் நீதி மன்றத்தில் இருக்கிறது, நீதிமன்றத்தில் உள்ள விஷயத்தை வெளியில் சொல்ல நாங்கள் கூறு கெட்டவர்கள் அல்ல.அதனால் அது குறித்து பேச மாட்டோம் என ஜகா வாங்கியுள்ளனர்.இந்த வாதத்தை ஆராய்வோம்.

1 . நீதி மன்றத்தில் உள்ள விஷயத்தை உணர்வு இதழில் வெளியிட எந்தத் தடையும் இல்லை.பல வழக்குகள் நீதி மன்றத்தில் உள்ள நிலையில் அது குறித்த செய்திகளை பல ஏடுகள் இன்றும் வெளியிடுகின்றன.ஆ.ராசா தொடர்பான ஸ்பெக்ட்ரம் விவகாரமும் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையிலேயே அது பற்றிய செய்திகள் ஏடுகளில் பரபரப்பாக வெளியாவது இணையத்தள வாசகர்களும் அறிவீர்கள்.அதனால் த.மு.மு.க விடமிருந்து களவாண்ட உணர்வில் வெளியிட எந்தத் தடையும் இல்லை என்பது முதல் விஷயம்.

2 . அதே விஷயத்தை நாம் மக்கள் ரிப்போர்ட்டில் வெளியிட்டோமே ! எந்த நீதி மன்றமும் எம்மை கண்டிக்கவில்லையே?அல்லது பொய் கேஸ் போட அலையும் இவர்கள் அந்த மக்கள் ரிபோர்ட் செய்தியை வைத்து நம் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கலாமே?ஏன் செய்யவில்லை?ஏன் என்றால் அண்ணனுக்கு தெரியும் அது பத்ரிக்கை சுதந்திரம் என்று!(இனியும் கன்டம்ப்ட் ஆப் கோர்ட் வழக்கு போடுவதற்கு முன் 8 தடவை யோசிக்க வைத்து விட்டது சென்னை உயர் நீதி மன்றம் என்பது தனி விஷயம்)

3 . இது தான் மிக முக்கிய விஷயம்...அவர்கள் கூறுவது வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும்,வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் தான் அது குறித்து வெளியில் பேசக்கூடாது.முகவை அப்பாஸ் கேட்டது அண்ணன் பீ.ஜே விடத்தில் தான்.வழக்கை போட்டிருப்பது அவரது மைத்துனர் இதாயத்துல்லாஹ்.ஆக வழக்கை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று சொல்வதன் மூலம் அண்ணன் தான் இந்த விஷயத்தில் சம்மதப்பட்டிருக்கிறார் என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டிருக்கின்றனர். உயர்நீதி மன்றத்தில் அண்ணனின் மைத்துனர்," இந்த வழக்கு விவகாரத்திற்கும்-பீ.ஜே விற்கும், டிஎன்டிஜே விற்கும் சம்மதம் இல்லை" என்று சொன்னதும் பொய் தான்.உயர் நீதி மன்றத்திலும் பொய் சொல்லியுள்ளனர்.ஆனால் அண்ணனோ எனக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்மதம் உண்டு என்கிறார் அப்பாசுக்கு கொடுத்த பதிலின் மூலம்.

4 . சரி அதெல்லாம் போகட்டும். இப்போது தான் கடந்த 22 ந் தேதியோடு வழக்கில் ஜட்ஜ்மென்ட் வந்து விட்டதே.இப்பொழுதாவது அப்பாசுக்கு பதில் சொல்வார்களா?

5 . இட ஒதுக்கீட்டின் கனியை பீ.ஜே வின் மகன் பறித்து கொடுத்தாரா என்பதையும், ரத்ததான விருதுகளுக்கான ஷீல்டுகளையும் வெளிப்படுத்த வேண்டும். அப்பொழுது தெரிந்து விடும் யார் மண்ணாங்கட்டி என்று.!

(அப்பாஸின் நியாயமான கேள்விகளை நாம் விளக்கி,விமர்சனம் செய்வதால் நம் மீது வெறி கொண்டு பாய்வார்கள்.இன்ஷா அல்லாஹ் நாம் அதையும் எதிர்கொள்வோம்.நம்மிடத்தில் சத்தியம் உள்ளது)

இனி நமது விஷயத்திற்கு வருவோம்.

கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் மகா அலெக்சாண்டர் என்று உலக வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.அதை ஆங்கிலத்தில் Alexander The Great என்று சொல்வார்கள்.அதற்கு காரணம் உலக நிலப்பரப்பில் அவன் பெரும் பகுதிகளை வெற்றி கொண்டவன் என்பதால்.அதே போன்று உலக அளவில் யாரும் செய்யாத இயக்க அபகரிப்பு மோசடியை,அயோக்கியத்தனத்தை அண்ணனும் செய்திருப்பதால் மேற்கண்ட தலைப்பை வைத்திருக்கிறோம்.

இந்த மெயிலோடு காவல் துறைக்கு இவர்கள் கொடுத்த புகார் மனுவையும்,அதன் தமிழாக்கத்தையும் வெளியிட்டுள்ளோம் இனி தீர்ப்பளிக்க வேண்டியது வாசகர்களாகிய நீங்கள் தான்.

அன்பார்ந்த வாசகர்களே...

நாம் இது வரை உண்மையை மாத்திரமே சொல்லி வந்திருக்கிறோம். இதன் அடிப்படையிலேதான் நமது விமர்சனமும் அமைந்துள்ளது. ஆதாரங்களை முன் வைத்துத்தான் நாம் நமது வாதங்களையும் வைத்துள்ளோம். எவரைக் குறித்தும் நாம் அவதூறாகவோ, கீழ்த்தரமாகவோ அல்லது அவர்களது அந்தரங்க- தனிப்பட்ட விஷயங்களைப் பற்றியோ விமர்சிக்க வில்லை.

சிலவேளை நமது விமர்சனத்தில் ஓரிரு வார்த்தைகள் வெளிப்பட்டிருந்தாலும் அது கூட அவர்களின் விமர்சனத்துக்கு எதிர் விமர்சனமாக, அதே சமயம் கண்ணியமான, நாகரீக வார்த்தைகளைத்தான் நாம் பயன் படுத்தியிருப்போம். இதையும் தாண்டி நமது விமர்சனத்தின் எந்தப் பகுதியாவது வாசகர்களை முகம் சுளிக்கவோ, சங்கடப்படுத்தும் வகையிலோ அமைந்திருக்குமேயானால் அதற்காக வருத்தம் தெரிவித்து விடை பெறுகிறோம்.

கடைசியாக ஒரு விஷயம் .நாம் உணர்வு பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருந்த காலத்தின் (நமது) வண்டவாளங்களை (!?) வெளியிடப்போவதாக நம்மை மிரட்டி மௌனமாக இருக்கச் சொன்னார்கள். அந்த வண்டவாளங்களை வெளியிடட்டும் அதன் பின் அது உண்மையாக இருக்குமானால் நாம் மௌனமாகிவிடுகிறோம். அது பொய் என்றால் மீண்டும் அவர்களை அயோக்கியர்கள் என்று இன்ஷா அல்லாஹ் பிரகடனப்படுத்துவோம் .
அன்புடன்
அபு ஃபைசல்

''அயோக்கியன் தி கிரேட்'' சார்பாக காவல்துறையில் வழங்கப்பட்ட புகார் மனுவை பார்வையிட கிளிக் செய்க;

23 December, 2010

கிறிஸ்த்துமஸ் தாத்தா வரமாட்டார்! [செய்தி பழசு; தகவல் புதுசு]


கிறிஸ்துமஸ்  என்றாலே சட்டென நினைவுக்கு வருவது கிருஸ்துமஸ் தாத்தாதான். ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் என எல்லதரப்பாரும் கிருஸ்துமஸ் தாத்தா வேஷம்போட்டு மகிழ்வர். இந்த கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் கிருஸ்துமஸ் பண்டிகைக்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ அது ஒரு மத நம்பிக்கை என்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை.

இந்த தாத்தா பற்றி ஒரு ஆசிரியை உண்மையைக்கூறி உச்சகட்ட சங்கடத்தில் மாட்டியுள்ளார் இங்கிலாந்தில் ராய்டன் நகரிலுள்ள நர்சரி பள்ளியின் ஆசிரியை தனது வகுப்பு பிள்ளைகளிடம், கிருஸ்துமஸ் தாத்தா என்றுயாரும் கிடையாது; அவர் உங்களை தேடிவந்து இனிப்புகளையும்,பரிசுகளையும் வழங்குவார் என எதிபார்க்காதீர்கள் எனக்கூற,
குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடம் ஆசிரியை பற்றி பற்றவைக்க, பெற்றோர்கள் அப்பள்ளியின் நிர்வாகத்திடம் ஆசிரியைபற்றி பற்றவைக்க இப்போது அந்த ஆசிரியையின் பணி ஊசலாடுகிறதாம்!

இந்த ஆசிரியை என்னத்த படிச்சு என்ன செய்ய..? பூமி உருண்டை என்று கண்டுபிடித்து சொல்லி கலிலியோ மாட்டிக்கொண்டு தவித்த வரலாறு இவருக்கு தெரியவில்லையே! பாவம்தான் போங்கள்!

22 December, 2010

ஐ என் டி ஜே இயங்க தடை இல்லை -உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோசடிப்பேர்வழிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றிருந்தனர்.இந்தத்தடையை நீக்குமாறு ஐ என் டி ஜே சார்பில் முறையீடு செய்யப்பட்டது.தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கில், இன்று (22 /12 /2010 ) தீர்ப்பளிக்கப்பட்டது.



நீதிபதி ராமசுப்ரமணியன், எஸ்.எம்.பாக்கர் தலைமையிலான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயங்க எவ்விதத்தடையும் இல்லை என்றும்,இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகள் 5 பேர் மீது தொடரப்பட்ட (அதாவது டிசம்பர் 6 போராட்டங்கள் உள்ளிட்ட இயக்கப்பணிகள் செய்ததாக தொடரப்பட்ட ) நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளார்.அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.


இது தொடர்பான விரிவான செய்திகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்...

20 December, 2010

போட்டுத்தாக்கும் திக்விஜய் சிங்கும்; திணறும் பாஜகவும்!

மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரேவுக்கு, இந்துத்துவாக்களின் அச்சுறுத்தல் இருந்தது என்ற பரபரப்பான கருத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் முன்வைத்தது முதல், அவருக்கும் பாஜகவுக்கும் மத்தியில் அறிக்கைப் போர் நடந்து வருகிறது. இதில் திக்விஜய் சிங் தாக்குதலில் தடுமாறுகிறது தாமரை.
 
இப்போது, யூதர்களிடம் ஹிட்லர்  தீராத பகைக் கொண்டது போல் இஸ்லாமியர்களை பா.ஜனதா பகைவர்களாக பார்க்கிறது என்று திக்விஜய் கூறி மீண்டும் அனலை கிளப்பியுள்ளார். திக்விஜய் சிங்கின் இந்த கூற்று நூற்றுக்கு நூறு உண்மையே! யூதர்களை கொன்று குவித்த நாஜிப்படைக்கு நாங்கள்  சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியாவின் குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் ரத்தம் குடித்து தாகம்  தீர்த்தது சங்பரிவார் என்பதை சாமான்யனும் அறிவான். ஆனால், இதை சொல்லும் திக்விஜய் சிங் சார்ந்த காங் அரசு, முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய அநீதிகளை இளைத்தவர்களைக்  கண்டு பாராமுகமாக இருப்பதும் கேள்விக்குரியதே! 
 
மேலும்  
பா.ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி  1992-ம் ஆண்டு மேற்கொண்ட ''ரத யாத்திரை'' இந்து- முஸ்லீம்களிடையே பெரிய அளவில் முரண்பாட்டினை தூண்டியது. இந்த ''ரத யாத்திரை'' இந்தியாவின் தீவிரவாதத்திற்கு ஆணிவேராக அமைந்தது. இந்திய வரலாற்றில் கறுப்பு சம்பவமாக பாபர் மசூதி இடிப்பு அமைந்தது என்று கூறும் திக்விஜய் சிங், பாபர் மஸ்ஜிதை இடித்த அத்வானிக்கு ஒருநாள் தண்டனை[!] வழங்கி சரித்திரம் படைத்தபோது மத்தியில் ஆட்சியில் இருந்தது பொம்மை நரசிம்மராவ் தானே! மேலும், காங் அரசால் அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் பாபர் மஸ்ஜித் இடிப்பு விஷயத்தில் அத்வானி உள்ளிட்ட 68   பேரை குற்றவாளியாக அடையாளம் காட்டியும், அந்த கும்பல் மீது கைவைக்க துணிவில்லாத காங் கட்சியை சேர்ந்த இவர் இவ்வாறு பேசுவது வெறும் பரபரப்புக்காகவா?
 
அடுத்து, எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகளாக இல்லை. எல்லா தீவிரவாதிகளும் முஸ்லீம்களாக உள்ளனர் என்று பா.ஜனதா குற்றம்சாட்டுகிறது. எல்லா இந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல. இந்து தீவிரவாதிகள் அனைவரும் பல்வேறு குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களாக ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறலாம் என்று கூறும் திவிஜய்சிங், பாஜக அவ்வாறு முஸ்லிம்களை சாடுவதற்கு  ஏதுவாக, எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும் அதிகாரவர்க்கத்தின் பார்வை முஸ்லிம்கள் மீது மட்டுமே  பதிந்தபோது, அதை கண்டுகொள்ளாமல்  மவ்னம் காத்தது ஏன்? 
 
மேலும், ''சிஷூ மந்திர்'' பள்ளிகளின் மாணவர்களிடம் அவர்களின் மனதில் முஸ்லீம்கள் பகைவர்கள் என்ற தவறான கருத்தினை ஆர்.எஸ்.எஸ். விதைக்கிறது என்கிறார் திக்விஜய் சிங். பாஜக ஆட்சியில் மந்திரியாக இருந்த முரளிமனோகர் ஜோஷியால் பாடத்திட்டங்களில் காவிக்கருத்துக்கள் திணிக்கப்பட்டு, வரலாறு திரிக்கப்பட்டதாக அப்போது பரவலாக குற்றசாட்டு எழுந்தது. அடுத்து வந்த காங் அரசு பாடத்திட்டங்களில் செய்த சீர்திருந்தங்கள் என்ன? என்பதையும் திக்விஜய் சிங் சொல்வாரா? மேலும் ராணுவம், காவல்துறையில் ஆர்.எஸ்.எஸ். தனது ஆதரவாளர்களை பெருக்கிவருகிறது என்கிறார் திக்விஜய் சிங். இதை சொல்லி புலம்புவதை விட, இப்போது காங்கிரஸ் அரசுதானே மத்தியில் நடக்கிறது?  ராணுவத்தையும், காவல்துறையையும் மதசார்பற்ற முறையில் வடிவமைத்திட தயக்கம்?
 
ஆக இப்படி வெற்று அறிக்கைகள் அரசியல் சதுரங்கத்தில் பாஜகவுக்கு சவாலாக இருக்கலாம். ஆனால் இதன் மூலம் இஸ்லாமியர்களுக்கோ நாட்டுக்கோ எந்த நன்மையுமில்லை. இஸ்லாமியர்கள் நமது சகோதரர்கள் என்ற கருத்தை காங்கிரஸ் எப்போதும் வலியுறுத்தும் என்ற திக்விஜய் சிங்கின் கூற்று உண்மையானால், முதலாவதாக, நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தபடி பாபர் மஸ்ஜிதை அதே இடத்தில் கட்டுவதற்கு நாடளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு, பாபர்மஸ்ஜிதை இடித்தவர்களையும்  தண்டித்து காட்டட்டும். அப்போதுதான் முஸ்லிம்கள் காங்கிரசை நம்புவார்கள். மாறாக வெற்று அறிக்கை காட்டி ஏமாற்றுவதற்கு முஸ்லிம்கள் ஏமாளிகளல்ல என்பதை காங்கிரஸ் புரிந்துகொள்ளட்டும்.

19 December, 2010

விவாதத்திற்கு அழைத்தவரையே விவாதப் பொருளாக்கும் வித்தகர்தான் இந்த பீஜே!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
 
மவ்லவி முஜாஹித் அவர்களை தவறு செய்யத் தூண்டி, அதை பதிவு செய்து வைத்துக்கொண்டு 'பிளாக்மெயில்' செய்து தாஃவா செய்யகூடாது என்று தாதாயிசம் செய்த அண்ணன் ஜமாஅத்தின் அழைப்புப்பணியை நேற்று நாம்  எழுதினோம். அந்த வரிசையில் அடுத்தப்படியாக, அண்ணனும் தன் பங்குக்கு முஜாஹிதை விவாதப் பொருளாக்கி அவர் மானத்தை வாங்கும் கீழ்நிலைக்கு சென்ற கதை பார்ப்போம்.

''பீஜேயுடன் விவாதத்திற்கு  தாயார் என்று முஜாஹித் கூறியதாக ஒரு தகவல் ரஷீத்  என்பவர் வாயிலாக, தனது இணையதள கருத்துரை பகுதியில் அறிகிறார் பீஜே. பீஜே உடனே முஜாஹிதுடன் விவாதத்திற்கு தயார்! என்று மட்டும் கூறியிருப்பார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பீஜே சொன்னதை கீழே படியுங்கள்;

''ஏற்கனவே முஜாஹிதிடம் விவாதம் செய்வது குறித்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட  பிறகும் அவர் ஒத்து வரவில்லை. [முஜாஹித் பீஜேயுடன் கலந்துரையாடுவதற்குதான் விரும்பினார் என்பது தனி விஷயம்] இப்போது அவர் மிகமிக அசிங்கமான செயலில் ஈடுபட்டு, இனிமேல் தாஃவா செய்யக்கூடாது என்ற நிபந்தனையின்  அடிப்படையில் அவர் குறித்த குறுந்தகடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை உடைப்பதற்கே  இந்த விவாத அழைப்பு.

முஜாஹிதிடம் விவாதிப்பதற்கு  தவ்ஹீத்ஜமாத் தயராக  உள்ளது. அதற்கு முன் அவர் செய்த பாலியல் சேட்டைகள் குறித்து பொதுமேடையில் விவாதித்து, அதன் பின் அவர் மார்க்கத்தை  பேச தகுதியுள்ளவர் எனபது நிரூபிக்கப்பட்டால் விவாதிக்கலாம். அவர் விவாதிக்கவோ, மேடையில் பேசவோ தகுதியுள்ளவரா என்பதை அவர் நிரூபிக்கத் தயாரா?

"முஜாஹிதிற்கு நிகரான கேவலமான ஒருவர் இந்த உம்மத்திலேயே கிடையாது" என்பது எனது நிலை. அந்த குறுந்தகடைப் பார்க்கும் யாரும் இதே முடிவுக்குத்தான் வருவார்கள். என்கிறார் பீஜே.

என்ன சகோதரர்களே! புரிகிறதா? முஜாஹிதுடன் இந்த  விவாதப்புலி விவாதிக்க  வரவேண்டுமென்றால், முதலில் விவாதத்தின் கருப்பொருளாக முஜாஹித் இருக்கவேண்டும் என்கிறார். அதாவது முஜாஹித் செய்த பாலியல் சேட்டை குறித்து முதலில் விவாதிக்கவேண்டுமாம். இதை பீஜே எப்போது சொல்லலாம் என்றால், 

தான் செய்த தவறை முஜாஹித் மறுத்து, பீஜே மாதிரி தன்னை 'தான் மட்டுமே யோக்கியர்' என்று முஜாஹித் சொன்னால் பீஜே இந்த நிபந்தனையை  விதிக்கலாம். ஆனால் முஜாஹிதோ தான் செய்த தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டு, அல்லாஹ்விடம்  தவ்பா செய்கிறேன் என்று சொன்ன பின்னால், அதைப்பற்றி விவாதிக்கவேண்டிய அவசியமென்ன? அவரது தீர்ப்பு அல்லாஹ்வின் கையிலல்லவா உள்ளது..?

ஆக, முதலில் முஜாஹிதை பற்றி விவாதித்தால்தான் அடுத்து மார்க்கவிஷயத்திற்கு வருவேன் என்று  பீஜே அடம்பிடிப்பதன் மூலம், பீஜேயின் நோக்கம் மவ்லவி முஜாஹித் அவர்களோடு முரண்பட்ட மசாயில்களை விவாதிப்பது அல்ல. மாறாக முஜாஹிதின் தனிப்பட்ட விஷயத்தை மேடையில் அலசி அவரின் மானத்தை கடைபோட்டு சீடியாக்கி விற்பதுதான்  என்பது தெளிவாக புலப்படுகிறது.

சமீபத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச்செயலாளர் மூன்று விஷயங்கள் குறித்து முபாஹலாவுக்கு தயாரா? என்று பீஜேவுக்கு சவால் விட, அதை ஏற்காமல் உன்மீது ஒரு பட்டியல்  விஷயங்கள் இருக்கிறது என்று சொல்லி, அதற்கும் முபாஹலாவுக்கு தயாரா? என்று சால்சாப்பு சொல்லி ஓடியதைப் போல், முஜாஹித் விசயத்திலும்  உலகத்திலேயே [பீஜேயின் கூற்றுப்படி] விவாதத்திற்கு அழைத்தவரையே விவாதப் பொருளாக்கி, விரைந்து பதுங்கிய இந்த விவாதப்புலியை இன்னுமா மக்கள் நம்புகிறார்கள்?

நன்றி; அப்துல்முஹைமின்.இயக்கங்களின் மறுபக்கம்.
 

17 December, 2010

தவ்ஹீத்'யிசமா..? தாதாயிசமா?

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

'பிளாக்மெயில்' எனப்படும் மிரட்டல்கள் பல வகைப்படும். யாரையேனும் கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுதல், தனது உடல்வலிமையை காட்டி மிரட்டுதல், ஆயதங்களை  காட்டி மிரட்டுதல், ஒருவரின் பலவீனத்தை படம்பிடித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் மிரட்டுதல் இவ்வாறான மிரட்டல்கள் உலகில் அயோக்கியர்களால் செய்யப்பட்டு வருவதை காண்கிறோம்.

ஆனால் தவ்ஹீத் என்ற பெயரில் தாதாயிசம் செய்த 'கொள்கை குன்றுகள்' கதை உங்களுக்கு தெரியுமா?

இலங்கையை சேர்ந்தவர் மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன். மிகச்சிறந்த இளம் மார்க்க அறிஞர். தவ்ஹீத் கொள்கையின் பால் மக்களை அழைக்கும் பிரபல பேச்சாளர். ஜமாலியிடம் அண்ணனே விவாதத்தில் சமாளித்துதான் கரையேறவேண்டியுள்ள  நிலையில், அந்த ஜமாலியை, 'இறந்தவர்களுக்கு கத்தமுல் குர்'ஆன் ஓதலாமா? என்ற தலைப்பில் விவாதத்தில் எதிர்கொண்டு, 'உயிரோடு உள்ளவர்களுக்கும் கத்தமுல் குர்'ஆன் ஓதலாம் என்று ஜமாலியே உளறிக்கொட்டி ஓட்டம் எடுக்கும் அளவுக்கு விவாதத்தில் வெற்றி கண்டவர். இவையெல்லாவற்றிற்கும் மேலாக பீஜேயை மானசீகமாக மிகவும் மதிப்பவர்.

அப்படிப்பட்ட மவ்லவி முஜாஹித் செய்த தவறு என்ன தெரியுமா? அண்ணனின் சில மசாயில்களுக்கு எதிரான கருத்தை  மக்கள் முன் வைத்ததுதான். விடுவாரா அண்ணன்.? சுழற்றினார் சாட்டையை அண்ணனின் இலங்கை பிரிவான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தை  நோக்கி! முஜாஹிதுக்கு மூக்கணாங்கயிறு போடுகிறீர்களா இல்லையா என்று!

எஸ்.எல்.டி.ஜே. முஜாஹிதிற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுத, அதற்கு பதிலளித்த முஜாஹித் மவ்லவியின்  கடிதம் அண்ணனுக்கு  அனுப்பப்பட்டு, அதில் திருப்தியுறாத அண்ணன் ஒரு கட்டத்தில் எஸ்.எல்.டி.ஜெயை ஓரங்கட்டிவிட்டு,  தனது இந்திய தூதர்களை[?] அனுப்பி டி .என்.டி.ஜே. இலங்கை கிளை என்று கடை திறந்தார். எல்.எல்.டி.ஜெயை புறக்கணித்து புதிதாக திறந்த கடை சோபிக்காததால், மீண்டும் புதுக்கடையை  மூடிவிட்டு, மீண்டும் எஸ்.எல்.டி.ஜெயை தனது ஆக்டோபஸ் கரத்தால் அரவணைத்துக் கொண்டார் என்பது தனிக்கதை.

எஸ்.எல்.டி.ஜெயின் அழைப்பாளராக இருந்த முஜாஹித் தனித்து விடப்பட்டார். அவருக்கு எதிராக அடுக்கடுக்கான விமர்சனங்கள் அண்ணன் ஆதரவோடு  அணிவகுத்தது.

  • முஜாஹித்  இவர் ஒரு ஷைத்தான் இவரை சந்திக்க எனக்கு விருப்பமில்லை
  • -உலக பித்னாவில் இவர் முதலானவர்
  • -அந்த மாதிரி நடிப்பார்
  • -இந்தியாவிற்கு வந்து பித்னா பண்னும் வேலையைத்தான் பார்த்தார்.
  • முஜாஹிதிற்கு நிகரான கேவலமான ஒருவர் இந்த உம்மத்திலேயே கிடையாது
இவ்வாறாக அணிவகுத்தன அண்ணின் விமர்சனங்கள். அதோடு அவருக்கு எதிராக சூழ்ச்சி வலையும் பின்னப்பட்டது.
 
அண்ணனின் இலங்கைகிளையை சேர்ந்த ஒருவர் முஜாஹித் அவர்களை தொடர்பு  கொண்டு பெண் குரலில் மயக்கும் வகையில் பேச, ஷைத்தானின் தூண்டுதலுக்கு இலக்கான   முஜாஹித் அவர்களும், சூழ்ச்சி  அறியாமல் பெண் என நினைத்து மோசமாக பதில் அளித்து பேச, முஜாஹித் அவர்களிடம் பேசியதை பதிவு செய்து, அதைக்காட்டி  இனிமேல் நீங்கள்   தாஃவா செய்யக்கூடாது என்று முஜாஹிதிடம் 'பிளாக்மெயில்' ஒப்பந்தம் செய்கிறது அண்ணனின் வழிநடக்கும் இலங்கை  கிளை.  
 
இதற்கு பெயர் என்ன  சகோதர்களே! 'பிளாக்மெயில்' இல்லையா? ஒரு பெண் பாத்ரூமில் குளிப்பதை மொபைலில் படம் எடுத்து வைத்துக் கொண்டு அப்பெண்ணை பாலியலுக்கு அழைத்ததாக அண்ணன் ஜமாஅத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட கதை மேலப்பாளையத்தில் நடந்ததே! அதைப்போல, மவ்லவி முஜாஹிதை பெண் குரலில் பேசி மயக்கி, பதிவு செய்து வைத்துக்கொண்டு, அவரை அழைப்புப் பணி  செய்யக்கூடாது  என்று மிரட்டி ஒப்பந்தம் எடுப்பது தவ்ஹீத்யிசமா ? அல்லது தாதாயிசமா..? சிந்திக்கவேண்டுகிறோம்.
 
மேலும் மவ்லவி முஜாஹித் தானாக ஒரு பெண்ணிற்கு போன் செய்து அப்படி பேசவில்லை. மாறாக திட்டமிட்டு அவரது தாஃவாவை முடக்கும் நோக்கில் செயல்படுவதுதான் தவ்ஹீத்யிசமா? இதுதான் நேர்வழியில் செல்கிறோம் என்றும், சொர்க்கத்துக்குரிய ஒரே ஜமாஅத் என்றும் பீற்றிக்கொள்ளும் அண்ணன் ஜமாஅத்தின் அழைப்புப்  பனியா?
 
சரி! இது இலங்கையில் நடந்தது. இதில் பொய் அண்ணனை ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். அண்ணனுக்கு இதில் சமந்தம் உள்ளது. எப்படி  எனில், மவ்லவி முஜாஹித் அவர்களிடம் பெண் குரலில் பேசி பதிவு செய்யப்பட்ட சீடியும், முஜாஹிதிடம் எடுக்கப்பட்ட மிரட்டல் ஒப்பந்தமும் அண்ணனுக்கு, இலங்கை  கிளை மூலம் அனுப்பப்படுகிறது. ஒரு தவ்ஹீத்  அறிஞரான, நாடறிந்த நாவலரான அண்ணன் அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்?
 
''முஜாஹித் தானாக அந்த தவறை செய்யவில்லை; அவரை அந்த தவறை செய்யுமாறு நீங்கள் தூண்டியுள்ளீர்கள். அதோடு அதை பதிவு செய்து அதை வைத்து அவர் தாஃவா செய்யக்ககூடாது என்று மிரட்டுவது தவறு. அதுமட்டுமன்றி செய்வதையும் செய்துவிட்டு வெட்கமில்லாமல் அந்த சீடியை எனக்கு வேறு அனுப்பியுள்ளீர்களா? உடனே உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு நான்  பரிந்துரைக்கிறேன் என்று அண்ணன் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை.
 
'தானா வந்து மாட்றாங்கய்யா' என்று அந்த சீடியை பார்த்து[கேட்டு] ரசிக்கிறார். அதை பாதுகாத்தும் வைத்துக் கொள்கிறார். [இது முஜாஹிதீன் வாக்குமூலம் மூலமாக அறியமுடிகிறது] பின்பு சுமார்  ஆறு மாதம்  கழித்து அழைப்புப்பணியை தொடங்கிய மவ்லவி  முஜாஹித், பீஜேயுடன் முரண்பட்ட மசாயில்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு தயார் என்று பேச, 'பீஜேயுடன் விவாதத்திற்கு தயார் என்று முஜாஹித் பேசுகிறார் என்று அண்ணனிடம் அவரது ரசிகர் பற்றவைக்க பொங்கி எழுந்த பீஜே தனது இணையதளத்தில்,
 
இப்போது அவர் மிக மிக அசிங்கமான செயலில் ஈடுபட்டு இனிமேல் தஃவா செய்யக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் குறித்த குறுந்தகடு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை உடைப்பதற்கே விவாத அழைப்பு" என்று எழுதி தன்னை தற்காத்துக்கொண்டு முஜாஹித் மானத்தை ஏலம் விட்டார்.
 
இதன் மூலம் முஸ்லிம்களின்  சிந்தனைக்கு, குறிப்பாக அண்ணனை கண்மூடி பின்பற்றும் சகோதர்களின் சிந்தனைக்கும்;
 
  • ஒருவர் தானாக ஒரு தவறை செய்தாலே, அந்த தவறை அவனுக்கு சுட்டிக்காட்டி அழைப்புப்பணி செய்யவேண்டும் என்ற கொள்கையுடவர்கள்[?]  முஜாஹிதை தவறு செய்ய தூண்டியது சரியா?
  • தானாக தவறு  செய்தால் அவன் மட்டுமே பொறுப்பாளி; ஆனால் ஒருவன் தவறு செய்ய தூண்டுதலாக இருந்தால், தூண்டியவனும் மார்க்க அடிப்படையில் குற்றவாளி  இல்லையா?
  • ஒருவனை தவறு செய்ய தூண்டியதோடு; அவனது பலவீனத்தை பதிவு செய்துவைத்துக் கொண்டு மிரட்டுவது தவ்ஹீத்யிசமா? தாதாயிசமா?
  • ஒருவன் தான் செய்த தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால், அவனை அல்லாஹ்வே மன்னிக்கத் தயாராக உள்ள  நிலையில், தவறை உணர்ந்து தவ்பா செய்துவிட்ட பின்னும், தவறு செய்ய தூண்டியவர்கள் அதை  மக்கள் முன் வைத்து ஒரு முஸ்லிமின் மானத்தை வாங்குவது தவ்ஹீத்யிசமா? தாதாயிசமா?
  • ஒருவன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக அழைப்புப்பணியை முடக்குவது தவ்ஹீத்யிசமா? தாதாயிசமா?
  • முஜாஹிதை தவறு செய்ய தூண்டியதோடு, அந்த தவறால் அவர் அழைப்புப்பணி  செய்யும் தகுதியை இழந்துவிட்டார் என்றால், அண்ணனும் அவரை பின்பற்றுபவர்களும் தவறுக்கு அப்பாற்பட்ட மலக்குகளா?
  • ஒருவன் ஏதேனும் ஒரு தவறை தானாகவோ; அல்லது தூண்டப்பட்டோ செய்துவிட்டால் அவனை அழைப்புப்பணியிலிருந்து  தடுக்கும் அதிகாரம் இவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டதா? அல்லது அவன் தூதரால் வழங்கப்பட்டதா?
சிந்தியுங்கள் மக்களே! தனக்கு எதிராக யார் வாய் திறந்தாலும் அவனை ஓய்த்துவிட்டே மறுவேலை பார்ப்பேன் என்று ஒவ்வொருவரின் மானத்தோடு  விளையாடும்  அண்ணனைப் புரிந்து கொள்ளுங்கள். அவரது அநீதிக்கு எதிராக களமிறங்குங்கள். அல்லாஹ்விற்கே தவிர எவருக்கும் அஞ்சாதீர்கள். அல்லாஹ் தாதாயிசத்தையும், ஷைத்தானியத்தையும்  வேரறுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.  இன்ஷாஅல்லாஹ்.  
 
நன்றி; அப்துல்முஹைமின்.

அமெரிக்கவால் பரிசளிக்கப்படும் அவமானங்களும்; அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் இந்தியாவும்!


அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
உலக பயங்கரவாதி அமெரிக்காவின் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால்
தொடர்ந்து இழிவை சந்தித்து வருகிறது இந்தியா. இதற்கு  எதிராக இதுவரையில்
உருப்படியான எந்த நடவடிக்கையையும் இந்தியா எடுத்ததாக தெரியவில்லை. எனவே
தான் இந்தியாவுக்கு எதிரான இந்த இழிநிலை தொடர்ந்த வண்ணமே உள்ளன. இந்தியாவை
பொருத்தமட்டில் அமெரிக்காவை தனது நேச நாடாகவே கருதுகிறது.அமெரிக்காவோ
தனது காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு  நாடாகவே இந்தியாவை கருதுகிறது. அதை அவ்வபொழுது நிரூபித்தும் வருகிறது.
 
ஒவ்வொரு நாடும் தனது பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, விமான நிலையங்களில் பயணிகளை சோதனைக்கு உட்படுத்துவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அந்த சோதனையை வேதனையாக்குவது அமெரிக்காவின் பணியாகும். அமெரிக்கவின் இத்தகைய சோதனைக்கு இலக்கானார் முன்னாள்  இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம்  அவர்கள். அப்போதே இந்திய அரசு கொதித்தெழுந்து அமெரிக்காவை கண்டித்திருந்தால் தொடர் அவமானங்கள்  தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் அதிகபட்சமாக நமது நாடு மேற்கொள்ளும் நடவடிகை என்பது, இந்தியாவில் உள்ள அமெரிக்கா துணைத்தூதரக அதிகாரியை அழைத்து கண்டிப்பது மட்டுமே! அப்துல்கலாம் அவர்களை செய்தது போன்ற சோதனையை, அமெரிக்கா  முன்னாள் ஜனாதிபதி  பில்கிளிண்டனோ அல்லது புஷ்ஷோ வரும்போது நாம் செய்திருந்தால் அமெரிக்கா வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருக்காதா?
 
அடுத்து முன்னாள் அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், நடிகர் ஷாரூக்கான், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் இதுபோன்ற இழிவுக்கு அமெரிக்கவால் உட்படுத்தப்பட்டனர். அவர்களாவது பிரமுகர்கள்தான். ஆனால் அமெரிக்காவாழ் அங்கீகரிக்கப்பட்ட இந்திய தூதராக அதிகாரிகளையே சோதனைக்கு உட்படுத்துவது ஆதிக்கத்தின் உச்சகட்டம் என்றால் மிகையில்லை. பொதுவாக தூதராக  அதிகாரிகளுக்கு விமான நிலையங்களில் தனி வரிசை ஏற்படுத்தி சோதிப்பதுதான்  உலக நடைமுறை.
 
ஆனால் அமெரிக்காவோ, சட்டம் எல்லாம் அடுத்தவருக்குத்தான்; தனக்கில்லை என்ற ரீதியில் செயல்படுவதை அமெரிக்காவுக்கான இந்திய தூதருக்கும், ஐநாவுக்கான இந்தியப் பிரதிநிக்கும் இழைக்கப்பட்ட அவமானங்கள் உலகுக்கு உணர்த்தும் வகையில் உள்ளன.
 
டிசம்பர் 4ம் தேதி அமெரிக்காவின் "மிஸ்ஸிப்பியின் ஜாக்சன் எவர்ட்ஸ்"
சர்வதேச விமான நிலையத்தில்,பால்டிமோர் செல்வதற்காக விமானத்தில் ஏற
காத்திருந்தார் மீரா சங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலையில் அவர்
சென்றிருந்தார்.
பாதுகாப்பு சோதனைக்காக வரிசையில் அவர் காத்திருந்தபோது திடீரென வந்த
பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து தான்
இந்தியத் தூதர் என்று மீரா சங்கர் கூறியுள்ளார். ஆனால் அதை அதிகாரிகள்
காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அவரை தனி அறைக்குக்குக் கூட்டிச்
சென்றனர். அங்கு பெண் அதிகாரிகள் உடல் முழுவதையும் கைகளால் சோதனை செய்து
மீரா சங்கரை இழிவு படுத்தினர்.
கோபமடைந்த மீரா சங்கர் தான் ஒரு இந்திய தூதர் தான் என்பதை மீண்டும் கூறி
அதற்க்கான ஆவணங்களையல்லாம் அந்த அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார் .ஆனாலும்
சேலை கட்டி வந்ததால் சோதனை செய்தே ஆகவேண்டும் என்று கூறி சோதனை செய்து
உள்ளனர்.

புதிதாக அமெரிக்காவால் இழிவு படுத்தப்பட்ட பட்டியலில் சேர்ந்து
உள்ளவர்,ஐ.,நா.,வுக்கான இந்தியாவின் பிரதிநிதி  ஹர்தீப் பூரி ஆவார். இவர் இரண்டு
வாரங்களுக்கு முன், அமெரிக்காவுக்குச் சென்ற போது, ஹூஸ்டன் விமான
நிலையத்தில் அவரது தலைப்பாகையான டர்பனை கழற்ற வேண்டும் என்று அமெரிக்க
விமான நிலைய அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். இதற்க்கு அவர் பலத்த
எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
ஹர்தீப் பூரியின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும்  அவருடைய தலைபாகை
கழற்றி சோதனை நடத்தப்பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கும் மேலாக காக்கவைத்து
அவமதித்து உள்ளனர். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம், தன் கவலையை
அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளது. இதோடு நிறுத்திகொள்ளாமல், இதையும் உரிய
முறையில் இந்தியா எதிர்கொள்ளவில்லையன்றால் இந்த இழிவுகள் நீடிக்கும்
என்பதில் ஐயம் இல்லை.
 
அதே நேரத்தில் அமெரிக்காவின் இந்த அவமானங்களை  கண்டிக்கிறோம் என்ற பெயரில் தினமணி முஸ்லிம்களை லேசாக சீண்டியுள்ளது.
''நமக்குத் தெரிந்து இதுவரை எந்த வளைகுடா நாட்டு  ஷேக்குகளின் மனைவியரையும்  அவர்களது பர்தாவை அவிழ்த்து அமெரிக்க  அதிகாரிகள் சோதனையிட்டதாகவோ, சோதனையிட நினைத்ததாகவோ  கூட நினைவில்லை. அப்படி  ஏதாவது அதிகாரி முனைந்திருந்தால், அடுத்த நொடியே பென்டகனும், வெள்ளை மாளிகையும், காப்பிடல்  ஹில்சும் அலறித் துடித்திருக்கும்'' என்று தினமணி விஷம் கக்குகிறது.
 
இந்தியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் அமெரிக்காவால் அவமானப் படுத்தப்பட்டால் அதற்காக ஒவ்வொரு இந்தியனும் குரல் கொடுக்கவேண்டும். கொடுக்கிறோம். ஆனால் அதற்காக, ''இந்திய பிரதிநிதியின் சேலையை அவிழ்க்கச்சொன்ன அமெரிக்காவே! அரபு ஷேக்குகளின் மனைவியரின் பர்தாவை அவிழ்க்காதது  ஏன்?  
என கூப்பாடு போடுவது, தினமணியின்  மனதில் மறைந்திருக்கும் பாசிச சிந்தனையின் வெளிப்பாடன்றி வேறில்லை. மேலும் பர்தாவை அவிழ்த்திருந்தால் பென்டகன் பதறியிருக்கும் என்பது உண்மைதான். ஏனெனில் அரபு ஷேக்குகள் வாய்மூடி இருந்தாலும், ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கொந்தளிப்போம். எனவே தினமணி சந்தடி சாக்கில் தனது 'சரக்கை' நுழைக்கவேண்டாம் என்று கண்டிப்புடன் கூறிக்கொள்கிறோம்.
 
ஆக்கம் :முபாரக்
குவைத் மண்டலம் : இந்திய தவ்ஹீத் ஜமாஅத்


16 December, 2010

நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில் துணிவிருந்தால்..!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
நேருக்கு நேர் மோதுவதில் முதுகெலும்பு முறிந்து போன அவதூறு பார்ட்டி
பீஜே, நிசார் என்ற போர்வையில் ஒளிந்து ஓலமிட்டு வருகிறார். ''அந்த பெயரில்
ஒளிந்து ஓலமிடுவது நான் இல்லை; எனக்கும் அதுக்கும் தொடர்பில்லை என்று
பக்கம் பக்கமாக கதை அளக்கலாம். இந்த கதையை மூளையற்ற மூடர்களும், மூளையை தாரைவார்த்த தொண்டர்களும் வேண்டுமானால் நம்பலாம். ஆனால் நாம்
நம்பமாட்டோம். பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்  போல், அவருடைய அனைத்து அவதாரங்களையும்  நாம் நிச்சயம்  நன்கு
அறிவோம். எப்படிப்பட்ட பரிணாமத்தை மேற்கொண்டு ஊடுருவினாலும் அவருடைய தோளை
நாம் நிச்சயம் உறிப்போம். [இன்ஷா அல்லாஹ்]
வினாக்கள் அறுபத்திஆறு :
சகோதரர் முகவை அப்பாஸ் சார்பாக அறுபத்தி ஆறு வினாக்கள் அவதூறு பார்ட்டியை நோக்கி தொடுக்கப்பட்டது. அதற்க்கு நேரடியாக பதில் சொல்ல
நாதியற்றவர், நிசார் என்ற பெயரில் ஒளிந்துக்கொண்டு தேய்ந்துபோன  ரிக்கார்டாக, பாலியல்;ஊழல் என்று பறையடிக்கிறார். பதிலுக்கு வழியின்றி, விமர்சனங்களை ஒருமையில் வாரி இறைக்கிறார். ஆபாச வார்த்தைகளை அள்ளித் தெளிக்கிறார். பதில் என்ற பெயரில் அவர் உளறியுள்ளதில் உள்ள மடமைகள், அவர் முழுமைப்படுத்தும் போது முன்வைக்கப்பட்டு முடைநாற்றம் எடுக்கும்  இன்ஷாஅல்லாஹ்..
 
கோபம் தான் வெளிப்படும் :
".யாரிடத்தில் பதில் இல்லையோ அவரிடத்தில் இருந்து வெளிப்படுவது
கோபமாகத்தான் இருக்கும்
."என்று இந்த அவதூறு பார்ட்டி ,தனது எதிரணியை
பார்த்து அன்று சொன்னார். அதை இன்று அவரே அழகாக பின்பற்றி தன்னிடம்
கேட்கப்படும் கேள்விக்கு பதில் இல்லை என்பதை நிருபித்து வருகிறார்.
பத்திரிகை அறிக்கையாக இருந்தாலும், பிரமுகர்களை  சந்திக்க போவதாக இருந்தாலும்
, கேமராவில் முகம் காட்டுவதாக இருந்தாலும் எல்லாவிஷயத்திலும் தன் அமைப்பின் [டம்மி] தலைவர்களை புறந்தள்ளிவிட்டு
முந்திரி கொட்டையை போல் முந்திகொள்ளும் இவர், எப்படிபட்ட கேள்விக்கும்
நேருக்கு நேர் பதில் சொல்வேன் என்று பிதற்றிகொள்ளும் இவர், பாக்கரின் படைத் தளபதிகளுக்கு பதில் அளிப்பதில் மட்டும் ஏன் முக்காடிட்டு வரவேண்டும்?
 
"போண்டா"வாங்கி கொடுப்பவர்
பெயரிலும் "டீ" வாங்கி கொடுப்பவர் பெயரிலும் ,ஓடி ஒளிந்து கொண்டு
வருவதற்கு  வெட்கப்பட வேண்டாமா?
போண்டாவையும் , "டீ" யையும் வாங்கி தரும் நபருக்கே, தெரியாமல் அவருடைய
பெயரிலையே அறிக்கைகளையும் ,அவதூறுகளையும் பரப்புவது
குற்றமில்லையா? கிழிந்த முகத்திரையை ஓட்ட வைக்க ஏன் இந்த குறுக்கு வழி? குறுக்கு வழியில் தான் இவருக்கு எத்தனை ஆனத்தம்?
நேரடியாக பதில் சொல்ல முன்வரட்டும் :
கேட்கப்பட்ட அறுபத்திஆறு  கேள்வியும் இவரையும் இவரது ஆளுமையில்  மூச்சுத்திணறும் ததஜவையும் நோக்கி தானே!
அப்படியாயின் இவரும், இவரது ஆளுமையின் கீழ் உள்ள ததஜ நிர்வாகிகள்  தானே அதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்பவும் ஒன்றும்
கேட்டுப்  போகவில்லை. அறுபத்திஆறு  கேள்விகளில்,பதினேழு கேள்விகளுக்கு
,கோபத்தில் கொந்தளித்து உளறியது போக  மிச்சமுள்ள கேள்விகளுக்காவது துணிவிருந்தால்
இவர் நேரடியாக பதில் சொல்ல முன்வரட்டும். இல்லை! அடுத்தவனிடம் இருந்த
அமைப்பின் பெயரையே களவாடின எனக்கு என்னிடத்திலே வேலை செய்பவனின்
[நிசார்]பெயரை களவாட முடியாதா  என்றாவது சொல்லட்டும்.
மாறாக, ததஜ வுக்கு சம்மந்தம் இல்லாத கள்ள அமைப்பின் வெப்
சைட்டிலிருந்து பதில் [என்ற பெயரில் உளறல்] வருவது ஏன்? த த ஜ
வுக்கும்-கள்ள அமைப்புக்கும் "அண்டர் டீலிங் "இருக்குப்பா! என்றாவது
சொல்லி தொலைக்கவேண்டும் .
தேய்ந்த ரிகார்டுகள் :
அடுத்து இன்னொன்றையும் சொல்லவேண்டியுள்ளது வைக்கப்பட்ட கேள்வி என்னவோ அதற்கு மட்டும் பதில் சொல்வது  தானே அறிவுடமை. அரசியல் வாதிகள் கூட ஒருவரை ஒருவர்
விமர்சனம் செய்யும் பொழுது அடுத்தவனின் அந்தரங்கத்தை தோண்டி
எடுப்பதில்லையே! வைக்கப்படும் கேள்விகளுக்குத் தானே பதிலளித்து விட்டு செல்கின்றனர். மார்க்கம் அறியா அரசியல் சாணக்கியர்களிடம் இருக்கும்
நாகரீகம் கூட இந்த மார்க்கப் போர்வை போர்த்தியுள்ளவரிடம்  இல்லையே! இது
வெட்கப்பட வேண்டிய விஷயமில்லையா? அது சரி இவருக்கு ஏதுவெட்கம்..?
ஓட்டம் பிடித்தார்;
அறுபத்தி ஆறு கேள்விகளில் ,பதினேழு கேள்விகளுக்கு மட்டும் உளறிய
இவர், மிச்சமுள்ள கேள்விகளுக்கு நாளை பதில் அளிக்கப்படும் என்று சொல்லி
விட்டு ஓட்டம் பிடித்தார். ஆனால் இதுவரையிலும் ஆளை காணோம்.
நிலுவையில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் சம்மந்தப்பட்ட இவரோ அல்லது ததஜ
வை சார்ந்தவரோ விடை அளித்து தன்னை யோக்கியர் என்பதனை காட்ட முன்வரட்டும் என்பதை இவரின் கீழான கவனத்திற்கும்.வாசகர்களின் மேலான கவனத்திற்கும்
சொல்லிக்கொள்கிறோம்.
 
 நேரடியாக பதிலளித்து தான் ஒரு யோக்கியர் என்று நிருபிப்பாரா!அல்லது
ஒளிந்து நின்று தான் ஓலமிடுவேன் என்று சொல்லி தன்னை மகா அயோக்கியன் என்று
ஒத்துக்கொள்வாரா! முடிவு அவர் கையில்...
ஆக்கம் :முபாரக், துணைச்செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,
குவைத் மண்டலம்