31 December, 2008

தர்மசங்கடத்தில் தாமரைக்கட்சி.


அன்பர்களே,

'திருடப்போனவனுக்கு தேள்கொட்டிய கதையாக' தங்களை பரிசுத்தவான்களாக காட்டிக்கொள்ளும் பாரதீய ஜனதாக்கட்சியின், டெல்லி தலைமையகத்தில் சுமார் இரண்டுகோடியே அறுபது லட்சம் ரூபாய்கள் களவுபோயுள்ளது. இதைப்பற்றி ப.ஜ. காவல்துறையிடம் புகார் செய்யாமல் தனியார் புலனாய்வு அமைப்பிடம் பனத்தைக்கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.

இதற்க்கு என்ன காரணமெனில், அந்தபனம் தேர்தல் செலவுக்காக வசூலிக்கப்பட்டதாகும். எனவே அதற்கு முறையான கணக்குகள் இருக்காது எனவே, புகார் செய்யப்போக இந்தப்பணம் எப்படிவந்தது என்ற கேள்விக்கு பதில்சொல்ல வேண்டிவரும் என்பதால் அதை ப.ஜ. தவிர்த்துள்ளது.
இதைதான் அன்றே பட்டுக்கோட்டையார், 'இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்று பாடினாரோ!

குறிப்பு;30-12-08சண் டீவியில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த ஆக்கம் எழுதப்பட்டது.

உலகமெங்கும் கேலிப்பொருளான உலகரவுடிபுஷ்.

அன்பர்களே,
இராக்கில் மாவீரன் முன்ததிர்அல்ஸெய்தி அவர்களிடம் செருப்படிபட்ட உலக ரவுடி புஷ் இரு உலகமனைத்திலும் கேலிப்பொருளாக்கப்பட்டுள்ளார். கிராபிக்ஸ் மற்றும் கார்ட்டூன்மூலமாக மட்டுமன்றி நிஜத்திலும் அவர் ஒரு கேலிப்பொருள்ஆகிவிட்டார்.

புஷ் மீது ஷுக்கள் பறந்துவந்து தாக்க, தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் புஷ் சரிவது போலகிராபிக்ஸ்!

கேமில் தாக்கப்படும் இலக்காக புஷ் படத்தை வைத்து, புஷ்சின் மூஞ்சிமீது சரியாக அடித்தால் ஸ்கோர் எகிறுகிறது!

புஷ் நடத்தும் டின்னரில் கலந்துகொள்ளவருபவர்களிடம், பாதுகாப்பு துறையினர் ஷுவை கழட்டி வாங்குவதுபோல் கார்ட்டூன்!

இப்போது இதற்க்கெல்லாம் மகுடம் சூட்டியது போல், சீனாவில் ஒரு வியாபாரி தனது வியாபாரத்தை பெருக்க அருமையான தள்ளுபடி அறிவித்துள்ளார் அது என்னவெனில், புஷ் உருவ படத்தின்மீது யார் சரியாக ஷுவை வீசுகிறார்களோ அவர்களுக்கு ஐம்பத்து சதவீதம் தள்ளுபடி என அறிவித்தார்.

அறிவித்த அறைமணிநேரத்தில் புஷ்மீது[படத்தின்மீது]சரியாக ஷுவைவீசி அறுபத்தினாலு ஷுக்கள் விற்றுதீர்ந்துள்ளது. காவல் துறைவந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் அளவுக்கு கூட்டம் வந்துள்ளது. உலகமெங்குமுள்ள வியாபாரிகள் தங்கள் விற்பனையை பெருக்க இந்தவழிமுறையை கையாளலாம்.
மேற்கண்ட விசயங்களை கேள்விபட்ட உலக சமாதான புறா[?]புஷ், மனம்நொந்து கவிதை எழுதுகிறார்.[கற்பனைதான்]

'துப்பாக்கியால் சுட்டாலும் உயிர்தான் போகும். போகிறதே; நீ செருப்பால் அடித்தபின்னால் உயிரைவிட வழிய என்மானம்!

29 December, 2008

தீவிரவாதி என நினைத்து கல்லூரி முஸ்லீம்மாணவர் சுட்டுக்கொலை

மும்பை தாக்குதலையடுத்து,பெங்களூரில் இரவுபகலாக போலீசார் வாகன சோதனை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவில் அல்சூர் போலீஸ் சரகம் டிரினிட்டி சர்க்கிள் அருகே பழைய விமான நிலைய சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திக்கொண்டு இருந்தனர்.

அதிகாலை 1.30 மணி அளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மின்னல் வேகத்தில் வந்தது. மேலும் மோட்டார் சைக்கிளின் முன்சக்கரத்தை மேலே தூக்கியபடி சாசகம் செய்தவாறு வந்தனர்.

வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மறித்தனர்.ராணுவ குடியிருப்புக்குள்புகுந்தார்ஆனால், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் போலீஸ் பிடியில் இருந்து அவர்கள் தப்பினர். எதிர்பாராத விதமாக சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளோடு அவர்கள் கீழே விழுந்தனர். உடனே 2 பேரையும் பிடிக்க போலீசார் விரைந்து சென்றனர். இதைப்பார்த்ததும் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

இதற்கிடையே, தப்பி ஓடிய வாலிபர்களில் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கர்நாடக&கேரள மாநிலங்களுக்கான ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தார். எச்சரிக்கைஅங்குள்ள ராணுவ உயர் அதிகாரி ரவீந்திரநாத்தின் வீட்டுக்குள் நுழைந்த அவர், பின்னர் வீட்டின் மொட்டை மாடியில் ஏறினார். யாருக்கும் தெரியாமல் மாடியில் படுத்தபடி அந்த நபர் தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.இதை, அங்கு இரவு காவல் பணியில் இருந்த ராணுவ வீரர் பார்த்து விட்டார். இதனால் அந்த நபர் தீவிரவாதியாக இருக்கலாம் என்று நினைத்த ராணுவ வீரர், உடனடியாக சரண் அடையும்படி அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அந்த நபர் அதை பொருட்படுத்தாமல் மாடியில் இருந்து கீழே குதித்து, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே ராணுவ வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீண்டும் எச்சரித்தார். ஆனாலும் அந்த நபர் சரண் அடையாமல் காம்பவுண்டு சுவர் மீது ஏறி தாண்ட முயற்சித்தார். இதனால் ராணுவ வீரர் அவரை நோக்கி துப்பாக்கியால் 6 ரவுண்டுகள் சுட்டார். அந்த நபர் மீது குண்டுகள் பாய்ந்தன. அவரது அடிவயிற்று பகுதியில் குண்டு துளைத்தது. ஆனாலும் அந்த நபர் சுவர் ஏறி வெளியே குதித்தார். அங்கு தயாராக நின்ற காரில் ஏறி நண்பர்களுடன் தப்பினார். அவரது நண்பர்கள் அந்த நபரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். விபத்து காரணமாக காயம் அடைந்ததாக கூறி ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு அவர்கள் அங்கிருந்து நழுவி விட்டார்கள்.

டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது அந்த வாலிபர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. மேலும் அவர் துப்பாக்கி சூட்டில் பலியானதும் தெரியவந்தது. இதுபற்றி டாக்டர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கல்லூரி மாணவர்விசாரணையில், துப்பாக்கி சூட்டில் பலியான நபர் பெங்களூர் பி.டி.எம். லே&அவுட் 1&வது ஸ்டேஜ் 8&வது மெயின் ரோட்டை சேர்ந்த முஸ்தாக் அகமது என்பவரின் மகன் முகமது முகரம் (வயது 20) என்றும், ரிச்மெண்ட் சாலையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பி.காம். பட்டப்படிப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.

அவரது தந்தை முஸ்தாக் அகமது சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். பிரேத பரிசோதனைமாணவர் முகமது முகரத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவாஜிநகர் பவுரிங் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவர்கள் முகமது முகரத்தின் உடலை பி.டி.எம். லே&அவுட்டில் உள்ள வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு ஏராளமானவர்கள் வந்து உடலை பார்த்துச்சென்றனர். போலீசார் அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த சம்பவம் குறித்து அல்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்திமற்றும் படம் நன்றி;தினத்தந்தி.

நமதுகேள்வி;

ஒருவரை சுடுவதாக இருந்தால் முதலில் எச்சரிக்கும் வண்ணம் வானத்தைநோக்கி சுடவேண்டும். அதை அந்த ராணுவ வீரர் செய்துள்ளார்! அதையும் மீறி தப்பிக்க நினைத்தால் காலில் சுட வேண்டும் அதை அந்த ராணுவ வீரர் செய்யத்தவறியது ஏன்?
உண்மையில் தீவிரவாதியாகவே இருந்தாலும் எடுத்தவுடன் 'என்கவுண்டர்' செய்யும் அதிகாரத்தை தந்தது யார்?
இப்படி அனைவரையும் போட்டுத்தள்ளினால் சட்டம் எதற்கு? நீதி மன்றங்கள் எதற்கு?
எனவே இதை உரிய முறையில் பாரபட்சமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தற்காப்பு என்ற பெயரில் தவறான 'என்கவுண்டர்கள்' தடுக்கப்படவேண்டும்.

28 December, 2008

வந்தேறி இஸ்ரேலின் வான்வழி தாக்குதல். வாய்மூடி மவ்னம்காக்கும் முஸ்லீம்உலகம்.


அன்பர்களே,
'ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக' இஸ்லாமிய வரலாற்றில் மூன்றாவதாக சங்கைப்படுத்தப்பட்ட பூமியான பாலஸ்தீன மண்ணுக்கு வந்தேறிகளாக வந்து சேர்ந்தவர்கள் யூதர்கள். தனது எஜமான் 'ஆக்கிரமிப்பு புகழ்' அமேரிக்காவின் ஆதரவோடு 'இஸ்ரேல்' என தன்னை பிரகடனப்படுத்திய நாள்முதல் மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களின் ரத்தத்தை குடித்து தாகம் தீர்த்து வருகிறது.

இந்த வந்தேறிகளின் ரத்தவெறிக்கு பச்சிளம் பாலகர்கள் கூட தப்பியதில்லை. இந்த வந்தேறிகள் எப்போது தாக்குதல் நடந்தினாலும் தம்மால் இயன்றவரை போராடி ஷகீதாகி வருபவர்கள் பாலஸ்தீனியர்கள். வந்தேறிகளின் பீரங்கி வாகனத்தை தனது கையிலுள்ள கல்கொண்டு தாக்கி நாங்கள் உயிர்நீத்தாலும் உனக்கு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள் என நெஞ்சுரம் கொண்ட தங்கங்கள் பாலஸ்தீனியர்கள்.

அப்படிப்பட்ட முஸ்லிம்கள் மீது வந்தேறி போர்விமானங்கள், நேற்று எவ்வித முன்னறிவிப்பு அன்றி சரமாரியாக குண்டுமழை பொழிந்ததில் 215 பேர் ஷகீதாகியுள்ளனர்.75oபேர் படுகாயமடைந்துள்ளனர். அக்கிரமத்தாக்குதல் நடத்திய வந்தேறி இஸ்ரேல், தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது. வழக்கம் போல முஸ்லீம் நாடுகள் பத்திரிக்கையில் வன்மையாக கண்டிக்கிறோம் என்ற அறிக்கையோடு வாய் மூடிவிட்டது.

அன்று நபி[ஸல்]காலத்தில் ஒரு உடைவாளை கரமேந்தி பெரும்படையை வென்ற வீரமிக்க பரம்பரை, இன்று பறந்து விரிந்த ஆட்சி அதிகாரம்,தளவாடங்கள், செல்வ செழிப்புகள் எல்லாம் இருந்தும், ஒரு சுண்டக்காய் ,நம் இனத்தை கருவருப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால், இவர்களை பற்றியும் நபி[ஸல்]அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

'ஒருகாலம் வரும் அப்போது தட்டிலுள்ள இறைச்சியை நோக்கி வருபவர்களை போல் உங்களை நோக்கி எதிரிகள் வருவார்கள்அவர்களுடைய உள்ளத்தில் உங்களை பற்றிய பயம்அகற்றப்பட்டுவிடும்என்று நபி[ஸல்]அவர்கள் கூறியவுடன், அந்த நாளில் நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்போமா? என நாங்கள் வினவ, இல்லை! நீங்கள் அதிகமாக இருப்பீர்கள் ஆனால் உங்கள் உள்ளத்தில் 'வகண்' நிறைந்திருக்கும் என்றார்கள். 'வகன்' என்றால் என்ன என்று நாங்கள் வினவ, உலகத்தை விரும்புவீர்கள் மரணத்தை வெறுப்பீர்கள் என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். [நூல்;அஹ்மத்]

என்னே! ஒரு சத்திய வார்த்தை இன்றைய ஆட்சியாளர்களுக்கு அப்படியே பொருந்திப்போகிறது பாருங்கள். ஆனாலும் இந்த யூத வந்தேறிகளுக்கு சொல்லிக்கொள்கிறோம் நிச்சயமாக! யூதர்களே உங்களை முஸ்லிம்கள் வெல்வோம்[இன்ஷா அல்லாஹ்] இதை இன்றைய முஸ்லீம் ஆட்சியாளர்களை நம்பி நாங்கள் சொல்லவில்லை. எங்களின் ஒரே தலைவர் நபி[ஸல்] அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

'நீங்கள் யூதர்களை வெல்வீர்கள்! எந்த அளவுக்கென்றால் கல்லுக்குப்பின்னால் மறைந்திருக்கும் யூதனை அந்தக்கல்,இதோ! ஒரு யூதன் என்று காட்டிக்கொடுக்கும்.என்று நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள். நூல்;புஹாரி.

அந்த நாளுக்காக உலக முஸ்லிம்களே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!






















26 December, 2008

பத்திரிக்கைகளின் மாற்றாந்தாய்மனப்போக்கு.


அன்பர்களே,
மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் உயிருடன் கைதுசெய்யப்பட்ட தீவிரவாதி முஸ்லீம் என்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அப்பாவிகளை கொல்பவர்கள்எந்தமதத்தை/எந்தநாட்டை சேர்ந்தவராகினும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடு.
மும்பைதாக்குதல் போன்றே பாகிஸ்தானில் உள்ள லாகூரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் நடந்த குண்டுவெடிப்பையடுத்து அதில் சம்பந்தப்பட்டவர்கள் என இந்தியர்கள் என கருதப்படும் முனிர் என்ற சதீஷ், ஆனந்தசுக்லா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகிறது.
இந்த செய்தியை வெளியிடும் பத்திரிக்கைகள் 'இந்தியாவை களங்கப்படுத்த பாகிஸ்தான் நடத்தும் நாடகமோ' என்ற பீடிகையோடு செய்தியை வெளியிடுகிறது. இந்தியாவில் நடக்கும் சம்பவத்தில் பாகிஸ்தானை சேர்ந்தவர் மீது குற்றம்சாட்டப்பட்டால் அதை சட்டத்தின்மூலம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே,' பாகிஸ்தான் தீவிரவாதிகள், இஸ்லாமியதீவிரவாதிகள்,முஸ்லீம்தீவிரவாதிகள் என அலறும் பத்திரிக்கைகள் அடுத்தநாட்டில் நம்மவர்கள் எனகருதப்படும் நபர்கள் கைதுசெய்யப்பட்டால்மட்டும் அதை திரித்து, இருநாடுகளுக்கும் மத்தியில் உள்ள நல்லுறவை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிடுவது ஏன்? இதைதான்' மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்பார்களோ'
பத்திரிக்கையாளர்களே, நாட்டின் ஜனநாயகத்தூண்களில் நீங்களும் ஒருவர்.உங்களின் பேனா வாள்முனையைவிட கூர்மையானது. அதைக்கொண்டு அநியாயமாக எந்த தனிமனிதரையும், சமுதாயத்தையும்,நாட்டையும் காயப்படுத்திவிடாதீர்கள்! உண்மைக்கும்,உறவுக்கும், சமாதானத்திற்கும் பாலமாக இருங்கள்!!

25 December, 2008

இஸ்லாத்தை மறக்கச்செய்யும் பதவி.


அன்பர்களே,

உலகத்தில் நமக்கு ஒரு அங்கீகாரம்/அதிகாரத்தை அடைவது என்பது வரவேற்கத்தக்கதே! ஆனால் அதை அடையும் வழி இஸ்லாத்திற்கு முரணாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் முஸ்லிம்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு அரசியல் கட்சிகளின் உட்பிரிவாகவே செயல்படுவதைப்பார்க்கிறோம். எனவேதான் இவர்கள் ஆதரிக்கக்கூடிய கட்சிகள் இஸ்லாத்திற்கோ/முஸ்லிம்களுக்கோ விரோதமாக நடந்தாலும் இவர்களால் தட்டிக்கேட்க முடியவில்லை.



முஸ்லிம்களுக்கு எதிரான எத்தனையோ விசயங்கள் நாட்டில் அரங்கேறியபோது தனது பதவியை ராஜினாமா செய்யாத சகோதரரர் காதர்மொய்தீன்அவர்கள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் கருணாநிதி சொன்னவுடன் தனது பதவியைராஜினாமா செய்தார். செய்துதான் ஆகவேண்டும் ஏனெனில், அவர் தி.மு.க.எம்.பி.யாவார்.



இதுமட்டுமன்றி, முஸ்லீம் அமைப்புகள் பிரசமுதாய மக்களிடமும் ஒரு நற்பெயரை பெற வேண்டுமென்ற எண்ணத்தில் இஸ்லாமிய வட்டத்தைதாண்டி செயல்பட்டு சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. காதற்மொய்தீன் அவர்கள் வேலூர் அருகே சாமியாரை சந்தித்ததும், இந்துமுன்னணி நிகழ்ச்சியில் பேசியதையும் குறிப்பிடலாம்.

மேலும், பிற சமுதாய மக்களின் பண்டிகைக்காலங்களில் இவர்கள் வாழ்த்து அறிக்கை வெளியிடுவார்கள். அதில்கூட ஒருதலைவர் வரம்புமீறி, 'கல்வியின் அன்னை சரஸ்வதியை நினைவுகூறும் இந்நாளில்' என்று குறிப்பிட்டிருந்தார்.


பிற சமுதாய மக்களை கவர வேண்டும் என்ற நிலைப்பாடு நம் சமுதாய தலைவர்களில் ஒருவரை எங்கேபோய் நிறுத்தியிருக்கிறது என்பதை மேலே உள்ள படத்தைப்பாருங்கள். எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார். அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த அண்ணல்நபி[ஸல்] அவர்களுக்கே நினைவஞ்சலி செலுத்துமாறு மார்க்கம் கட்டளையிடாதபோது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் சமாதியில் அஞ்சலி செலுத்தவைத்தது எது..? பதவி போதைதானே!


தனக்கென ஒரு அமைப்பு வைத்திருப்பவர்கள் நிலையே இதுவென்றால், பிற அரசியல் கட்சிகளில் அங்கம்வகிப்பவர்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தனது படத்தின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மக்கள் மனதில்பதியவைத்த விஜய்கான்[?] கட்சியை சேர்ந்த முஸ்லிம்களின் விளம்பரம்;

அகிம்சையை சொன்னார் காந்தி

ஈகையை சொன்னார் நபிகள்

இவை அனைத்தையும் சொன்னார் கேப்டன்.
தனது போலி தலைவரை உய்ர்த்திப்பிடிப்பதற்காக உண்மைத்தலைவர்,உத்தம தலைவர் நபி[ஸல்]அவர்களை பின்னுக்கு தள்ளியதை பார்த்தீர்களா! இந்த கேப்டன்[?] சொல்லாததை,சொல்லமுடியாத அத்துணை போதனைகளையும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் நபிஸல்]அவர்கள்.
எனவே, அரசியலில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களே, நீங்கள் பிற சமுதாயமக்களை கவரவேண்டுமேனில், அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யுங்கள். வரவேற்கிறோம். அதைவிடுத்து மின்மினி பூச்சிகளின் வெளிச்சத்திற்காக சத்தியஒளியை மறந்துவிடாதீர்கள்!
படங்கள்;நன்றி தினத்தந்தி

22 December, 2008

தாலிபான்கள் தாக்குதலை தாக்குப்பிடிக்கமுடியலே! நேட்டோ கமாண்டர் ஒப்புதல்.


அன்பர்களே,
உலகமனைத்தையும் தனது காலனி ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர நினைத்து உலக சட்டாம்பிள்ளையாக தன்னைக்காட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் கழுகுகண்களுக்கு அரைவயிறு கஞ்சிகுடித்தாலும் அல்லாஹ்வுக்கு பயந்து அல்லாஹ் அருளிய சட்டங்களையே தனது ஆட்சியின் சட்டமாக கொண்டு ஆட்சி செய்துவந்த தாலிபான்களின் ஆட்சி கண்ணைஉறுத்தியது.
எப்படியேனும் ஆப்கானில் தனக்கு தலையாட்டும் அரசைநிறுவுவதற்காக, இரட்டைக்கோபுர தாக்குதல் நாடகம் நடத்தி அதைக்காரனம்காட்டி ஆப்கான்மீது போர்தொடுத்து அங்கேதனது அடிமை ஆட்சியை நிலைநிறுத்தியதுஅமெரிக்கா. இருப்பினும் இதற்காக அமெரிக்கா கொடுத்த/கொடுத்துக்கொண்டிருக்கும் விலைஏராளம்.
தரைப்படை தாக்குதல் நடத்தினால் தாலிபான்களால் நாம்
தரைமட்ட மாக்கப்படுவோம் என்பதை அறிந்து வான்வெளி தாக்குதல் நடத்தி அநியாயமாக ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிரைக்குடித்து ஆப்கணுக்குள் அடிஎடுத்துவைத்த அமெரிக்கஆக்கிரமிப்பு ராணுவத்தால் தாலிபான்களை முழுமையாக ஒழிக்கமுடியவில்லை என்பதை நேட்டோ படைகளின் தலைவர் அட்மிரல்மைக் முல்லன் கூற்று உண்மைப்படுத்துகிறது.
ஏற்கனவே அறுபதாயிரம் ஆக்கிரமிப்பு படைகளும் அதிநவீன தளவாடங்களுடன் நிலைகொண்டுள்ள ஆக்கிரமிப்பு படையால் தாலிபான்களை அசைக்கமுடியாததால் மேலும் முப்பதாயிரம் வீரர்களை[?]அனுப்பவேண்டும் எனக்கேட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தாலிபான்கள் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தி மீண்டும் ஆப்கானில் இஸ்லாமிய ஆட்சி மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை என படம்பிடித்துக்காட்டுவதாக உள்ளது!

إِن يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهُ وَتِلْكَ الأيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللّهُ الَّذِينَ آمَنُواْ وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاء وَاللّهُ لاَ يُحِبُّ الظَّالِمِينَ
உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்;. இதற்குக் காரணம், ஈமான் கொணடடோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.3:140

21 December, 2008

கண்துடைப்பு கைதுகளும் மக்கள்பட்ட கஷ்டங்களும்.

அன்பர்களே,
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கைராணுவம் யுத்தத்தை தொடங்கியவுடன் இந்தப்போரில் அப்பாவிமக்கள் பலியானதையடுத்து, அப்பாவி ஈழத்தமிழர்களுக்காக நாங்கள் குரல்கொடுக்கிறோம் என்றபெயரில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளை ஆதரித்தும் அதன்தலைவரான பிரபாகரனை, இனவெறிக்கெதிராக போராடி நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா அளவுக்கு புகழ்ந்து பேசுவதும் விடுதலைபுலிகளை நேற்றும் ஆதரித்தோம்,இன்றும்ஆதரிக்கிறோம்,நாளையும் ஆதரிப்போம் என்றெல்லாம் பகிரங்கமாக பேசுவது இப்போது பேஷனாகி விட்டது.

கடந்தமாதம் ராமேஸ்வரத்தில் திரைப்பட இயக்குனர்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என்ற குற்றசாட்டின் பேரில்,இயக்குனர்கள் அமீர்,சீமான் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெயப்பட்டார்கள் இதே பிரிவின்கீழ் வைகோ, கண்ணப்பன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு மேற்கண்ட அனைவரும்ஜாமீனில் வெளிவந்துள்ளநிலையில், ஈரோட்டில் நடந்த இலங்கை தமிழர் ஆதரவு பொதுக்கூட்டத்தில் வன்முறையைத்தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் இவரோடு பெரியார் தி.க. வைச்சேர்ந்த கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்களின் கைதுக்கு காங்கிரஸ்தலைவர் தங்கபாலுவின் தூண்டுதலே காரணம் என்று எண்ணிய
பெரியார் தி.க.,விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் காங்கிரஸ் தலைவர்களின் கொடும்பாவியை எரிக்க அதையொட்டி காங்கிரஸ் மற்றும் பெரியார்தி.க.,வி.சி. அமைப்புகளிடையே கைகலப்பு ஏற்பட்டு சென்னையில் மக்கள் நெருக்கடிமிகுந்த சாலையில் காங்கிரஸ் மறியல்செய்துள்ளது. அதன் தலைவர் தன்பங்குக்கு திண்டுக்கல்லில் மறியலில் ஈடுபட்டுள்ளார். ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக இவர்கள் முட்டிக்கொள்வதில் மக்களுக்குத்தான் எத்தனை இடைஞ்சல்கள். இதை இவர்கள் ஒருபோதும் நினைத்து பார்ப்பதில்லை.

சரி! இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருப்பார்களா..? இல்லை!இல்லை!! நாளையோ நாளை மறுநாளோ ஜாமீனில் வருவார்கள் மீண்டும் ஜாலியாக இன்னொரு கூட்டத்தில் ஜாம்பவான் பிரபாகரனை ஆதரித்து கர்ஜிப்பார்கள்!

இதேமாதிரிஒருசிமியையோ,ஒரு அல்உம்மாவையோ,ஒரு ஜிகாத்கமிட்டியையோ ஆதரித்து ஒருமுஸ்லீம் பேசினால் அவன்ஆயுள் முழுக்க விசாரனைக்கைதியாகவே உள்ளே இருந்திருப்பான். என்னசெய்வது நம்நாடு மதசார்பற்ற நாடல்லவா! அதாவது முஸ்லீம்[மத]சார்பற்ற நாடல்லவா!!

19 December, 2008

அந்துலேஅடித்தார் சிக்ஸ்சர்! சங்பரிவாரம் ஆனதுபஞ்சர்!!

அன்பர்களே,
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் அப்பாவிமக்களோடு, மகாராஸ்டிர தீவிரவாத தடுப்புப்பிரிவு தலைவர் திரு.ஹேமந்த்கர்கரே அவர்கள் பலியானதும் இவர் மாலேகான் குண்டுவெடிப்பை நடுநிலையோடு கையாண்டு சில இந்துத்துவா பயங்கரவாதிகளை கைதுசெய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மும்பைத்தக்குதலில் பலியானது பல்வேறு சந்தேக அலைகளை அந்தநேரத்தில் எழுப்பியது இருப்பினும் ஆதிக்க சக்திகளால் அவை அமுக்கப்பட்டது. மும்பைதாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் அந்துலே அவர்கள், கர்கரே கொல்லப்பட்டதுகுறித்து பேச அது மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது.'

முஸ்லிமல்லாத தீவிரவாதிகள் குறித்து கர்கரே விசாரித்துவந்தார் எனவே,அவர் தீவிரவாதிகள் மற்றும் வேறுயாறாலோகொல்லப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல்,நரிமன் இல்லம் செல்லாமல் வேறு இடத்திற்கு அவரை போகச்சொன்னது யார்?' என்று அந்துலே பேசியவுடன்,
பி.ஜெ.பி.,சிவசேனா,போன்ற சங்க்பரிவார கட்சிகள் அந்துலேவுக்கு எதிராக குரல் எழுப்பி அவையை அமளிக்காடாகியுள்ளனர். மாநிலங்களவையில் இதே பிரச்சினையில், இந்த சங்க்பரிவார கும்பலோடு திராவிடக்கட்சி[?]யானஅம்மா தி.மு.க.வும் சேர்ந்து குரலெழுப்பியுள்ளனர்.

கர்கரே குறித்து அந்துலே பேசியவுடன் சங்கபரிவாரம் ஆர்ப்பரிக்கவேண்டிய அவசியமென்ன..? கர்கரே தீவிரவாதிகளால் கொல்லப்படவில்லை என்று அந்துலே கூறவில்லையே! தீவிரவாதிகள்மற்றும் வேறுயாறாலோ கொல்லப்பட்டிருக்கலாம் என்றுதானே கூறியுள்ளார். ஏன் சங்கபரிவாரம் துடிக்கவேண்டும்.?இதைதான் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பார்களோ!

மாவீரனுக்கு மண்டியிடும் மகுடங்கள்.

செய்தியை படிக்க படத்தின் மீது டபுள் கிளிக் பண்ணவும்.
நன்றி;தினத்தந்தி

18 December, 2008

பறந்த ஷுவும்- உயர்ந்தமதிப்பும்.



அன்பர்களே,

உலகின் நன்மைக்காக பாடுபட்ட தலைவர்கள், நாட்டின் முக்கியஸ்தர்கள் போன்றோர் பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்படுவதுண்டு. சில நேரங்களில் பாடகர்கள், நடிகைகள் பயன்படுத்திய உள்ளாடைகள் வரை ஏலம் விடுவதுண்டு அதை கோடிகள் கொடுத்து வாங்குபவர்களும் உண்டு. அதிலிருந்து மாறுபட்ட ஒருசெய்தி!


இராக்கில் உலக பயங்கரவாதி புஷ்மீது வீசப்பட்ட ஷுக்களை விலைகொடுத்து வாங்க ஒருவர் முன்வந்துள்ளார். அவர் சவூதியை சேர்ந்த முஹம்மது அல் மக்காபா ஆவார். அவர் கூறியுள்ளதாக பத்திரிக்கையில் வந்துள்ள செய்தி,

புஷ் மீது வீசப்பட்ட ஷுக்களை ஐம்பத்துகோடி கொடுத்து வாங்க தயாராக உள்ளேன் அது மட்டும் எனக்கு கிடைக்குமாயின் என் சொத்துக்களில் அதைத்தான் மதிப்பு மிக்கதாக கருதுவேன் என்று கூறியுள்ளார்!


பூவோடு சேர்ந்த நாறும்மனம் பெரும் எனக்கேள்விப்பட்டதுண்டு. முதன்முறையாக ஒரு பயங்கரவாதியை பதம்பார்த்த சாதாரண ஷுவுக்கும் மதிப்புண்டு என்பதை இப்போதுதான் பார்க்கிறோம். புஷ் மீது முஸ்லிம்கள் மட்டுமல்லாது மனிதநேயர்கள் அனைவருமே வெறுப்பில் உள்ளதை இது காட்டுகிறது.

அல்லாஹ்வை மறுக்கும் கூட்டத்தாரை அல்லா இம்மையிலும் இழிவுபடுத்துவான் மறுமையிலோ மகத்தான வேதனையை சித்தப்படுத்தி வைத்துள்ளான்.

17 December, 2008

வீட்டில் உள்ள தேளை முதலில் அடிங்கவே!

அன்பர்களே,

'கூரையேறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறேன் என்றானாம்' என்ற பழமொழி தமிழில் உண்டு. அதுபோல, மும்பைத்தாக்குதலையொட்டி இருபது தீவிரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானிடம் கோரியதுஅவர்களோ நாங்கள் உங்களிடம் ஒப்படைக்கமாட்டோம் அதேநேரத்தில் நீங்கள் குறிப்பிடும் நபர்கள் குற்றம் செய்திருந்தால் எங்கள்நாட்டு சட்டப்படி அவர்களை தண்டிப்போம் என்று பாகிஸ்தான் கூறியதோடு இருபது நபர்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது. இந்நிலையில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப்முகர்ஜி, இருபது தீவிரவாதிகளையும் இந்தியாவில் ஒப்படைக்காதவரை பாக்-உடன் எந்த சமரசமும் இல்லை என்று கூறியுள்ளார்.நமது அமைச்சரின் கூற்றை வரவேற்கும் அதே வேளையில்,

பாபர்மசூதியை இடித்த பயங்கர வாதிகளை கைது செய்வது எப்போது..? மும்பையில்,குஜராத்தில்,கோவையில் இப்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை கருவறுத்த பயங்கரவாதிகளை கைது செய்வது எப்போது..?

குற்றத்தையும் செய்துவிட்டு அதை நாங்கள்தான் செய்தோம் மோடியின் உத்தரவின் அடிப்படையில் செய்தோம் என தெகல்காவில் பகிரங்கமாக பேட்டியளித்த பின்னும் கண்டுகொள்ளாத அரசு, கைது செய்து தண்டிக்க திராணியில்லாத அரசு, அடுத்த நாட்டில் இவர்கள் கேட்டவுடன் ஒப்படைக்கவில்லை என துடிப்பது வியப்பாக உள்ளது.

பிரணாப் முகர்ஜி அவர்களே, முதலில் நம்வீட்டிற்குள் சுதந்திரமாக வலம்வந்துகொண்டிருக்கும் ஜந்துக்களை முதலில் அடியுங்கள்!
வெளியில் உள்ளதை அப்புறம் பார்க்கலாம்!

15 December, 2008

வாக்குறுதியும்--ஜெயலலிதாவும்.


அன்பர்களே,
மதுரைமாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு அரசியல்கட்சிகள் ஆயத்தமாகிவரும் நிலையில், அத்தொகுதியை தனது கூட்டணிக்கட்சியான ம.தி.மு.க விடமிருந்து தனது அன்பு[?]க்கட்டளை மூலம் கேட்டுப்பெற்று அதில் தனதுகட்சி வேட்பாளரை களம் இறக்குகிறார் ஜெயலலிதா.
இதைகானும் அரசியல் நடுநிலையாளர்கள் என்னஇது! எந்தக்கட்சி உறுப்பினர் மரணித்தாரோ அக்கட்சி வேட்பாளர்தானே போட்டியிடனும்! ஜெயலலிதா இப்படி வாக்குமாறலாமா..? எனக்கேள்வி எழுப்புகின்றனர். இது ஒன்றும் ஜெயலலிதாவுக்கு புதிதல்ல.
இவரது கூட்டணியில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அப்துல் லத்தீப் சாஹிப் மறைந்தவுடன் அத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்காமல், தனது கட்சி வேட்பாளரை அதுவும் முஸ்லிமல்லாத ஒருவரை நிறுத்தி கூட்டணி தர்மத்தை[?] காத்தவர் ஜெயலலிதா.
அது மட்டுமன்றி, இந்த ஜெயலலிதா அத்வானிக்கு செலக்டிவ் அம்னீசியா உள்ளது என்று கூறினார் ஆனால் உண்மையில் முஸ்லிம்கள் விசயத்தைமட்டும் மறக்கடிக்கும் செலக்டிவ் அம்னீசியா ஜெயலலிதாவுக்கு உண்டு! தமு.மு.க சார்பாக சென்னையில் நடைபெற்ற மாபெரும் வாழ்வுரிமை மாநாட்டில் ஜெயலலிதா இரு வாக்குறுதிகள் தந்தார்.
1நான் ஆட்சிக்கு வர நீங்கள் உதவினால் உங்களது இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற ஆவன செய்வேன் என்றார்!
அந்தக்காலகட்டத்தில் எந்த அரசியல் கட்சியாலும் தீண்டப்படாமல் இருந்தஅவரது கட்சியை முஸ்லிம்களின் முழுமையான வாக்கு வங்கியின் மூலம் ஆட்சியில் அமரவைத்தோம். முதல்வரானபின் சட்டமன்றத்தில் முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பாக ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை திருமாவளவன் அவர்கள் நினைவுபடுத்தி பேசியபோது அப்படி நான் எந்த வாக்குறுதியும் முஸ்லிம்களுக்கு தரவில்லை என்றார்.
2.பி.ஜெ.பி. யுடன் எக்காலத்திலும் இனி கூட்டு சேரமாட்டேன் என்றார். அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜெ.பி.யுடன் கூட்டணி கண்டார்.
சரி!ஜெயலலிதாவை பத்தித்தான் தெரிஞ்ச கதைதானே பலசெயெல்லாம் இப்ப ஏன் கிளறுகிறீர் என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது! ஒரு மூமின் இருமுறை ஏமாற மாட்டான் என்ற நபிமொழியை மறந்து,கடந்த சட்டமன்ற தேர்தலின்போது இந்த ஜெயலலிதா லிபரகான் கமிசன் மாதிரி பலமுறை புதுப்பிக்கப்பட்ட ஒருகமிஷனை தன் பங்குக்கு ஒருமுறை புதுப்பித்து அதுவும், தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபின்னால் அந்த பேப்பரை கொடுக்க, அந்தபேப்பரை வைத்துக்கொண்டு
இதோ! முஸ்லிம்களின் இடஒதுக்கீடுக்காக ஆணையம் அமைத்துவிட்டார் என்றுகூறி அக்கட்சிக்காக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தவர்களில் நானும் ஒருவன்.உண்மையில் அதற்காக இப்போது வெட்கப்படுகிறேன்! அதோடு, விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கிறது அதையொட்டி மீண்டும் முஸ்லிம்களின் வாக்கை அறுவடை செய்ய; 'மத்தியில் எங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க ஆவன செய்வேன்' என்று ஜெயலலிதா கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!ஜெயலலிதாவின் வாக்குறுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு என்னைப்போன்ற அறியாதவர்கள் முஸ்லிம்களிடம் வாக்கு கேட்டுவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! முஸ்லீம் சமுதாயமே விழிப்போடு இரு!!

ஆபாசத்தைக்கடைவிரிக்கும் அழகிப்போட்டிகள் தடுக்கப்படுமா..?



அன்பர்களே,

அழகிப்போட்டிகள் அபூர்வமாக நடைபெற்ற காலம் மலையேறி, இப்போது உலக அழகிப்போட்டி, இந்திய அழகி, சென்னைஅழகி, மாம்பலம் அழகி என பல்வேறு பரிமாணங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த அழகிப்போட்டிகளில் பங்கெடுக்கும் பெண்களில் பெரும்பாலோர் ஆடை அணியவில்லை என்று கூறும் அளவுக்கு ஆடை அணிந்து பூனைநடை நடந்து தங்கள் திறமையை[?] காட்டி வெற்றிபெற முயற்சிக்கிறார்கள்கணவனுக்கு மட்டும் காட்டவேண்டிய அழகை இப்படி கடைவிரிப்பது நியாயமா..? எனக்கேள்வி எழுப்பினால்,இவர்களின் பதில்;
அழகிப்போட்டியில் அழகை மட்டும் பார்ப்பதில்லை! அறிவையும் சோதிப்பார்கள் எனக்கூறுகின்றனர். சரி! எதோ பாரதூரமான கேள்வி கேட்பார்களோ என்றுபார்த்தால் இந்த ஆண்டு தென்ஆப்ரிக்காவில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் பங்கெடுத்த இந்தியாவைச்சேர்ந்த அழகி, ஒருகேள்விக்கு இந்த பதிலைக்கூறினாராம்;

நீ உறங்கும்போது காண்பதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வதே கனவு!

இந்தபதிலை வைத்தே போட்டியில் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்க்கப்படுகிறது என்பதை யூகித்துக்கொள்ளலாம்.

வர்த்தக நிறுவனங்கள் கோடிகணக்கில் சுருட்டுவதற்காக அழகிப்போட்டி என்றபெயரில் பெண்களை காட்சிப்பொருளாக ஆக்குவதை எந்த பெண்ணுரிமை[?]அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை. ஒருவேளை இந்திய அழகி வெற்றி பெற்றுவிட்டால் அவர்களுக்கு பிரதமர் முதல் பாமரன்வரை பாராட்டு வேறு! கலாச்சாரத்திற்கு பெயர்போன இந்தியாவில் அழகிப்போட்டிகள் நடத்த அனுமதி மறுப்பதோடு, உலக அழகிப்போட்டியில் இந்தியப்பெண்கள் கலந்து கொள்வதையும் தடுக்கவேண்டும். இல்லையேல், வருங்கால ஆபாச சீரழிவிற்கு நாமே வாசலை திறந்துவைத்த பாவம் வந்து சேரும். ஆட்சியாளர்கள் உணருவார்களா..?

வாங்கிக்கட்டிகொண்ட வந்தேறி புஷ்.




பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்தித்துப் பேசினார்.


பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.


பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.
அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாக கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார். ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே என்று கோபமாக கூறியபடி தனது ஷூக்களை அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி ராக்கெட் போல வீசினார்.


முதல் ஷூ பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குணிந்து தப்பினார். அந்த ஷூ பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது. 2வது ஷூ வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அந்த ஷூவும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.


இந்த சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார்.. அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... பாதுகாப்புப் படையினர் சுதாரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது செருப்பு அல்லது ஷூவை தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.
பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.






நன்றி;Kadir Nesan

12 December, 2008

ஜமாஅத் உத்தாவா மீதானஐ.நா.வின்தடையும் நடுநிலையாளர்களின் வேண்டுகோளும்!


அன்பர்களே,
மும்பைக்குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டதாக இந்தியாவால் குற்றம் சாட்டப்பட்ட ஜமாஅத் உத்தாவா என்ற அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதன் முக்கிய தலைவர்களின் சொத்துக்களை முடக்கியும் ஐ.நா. உத்தரவிட்டுள்ளது.
ஜமாஅத் உத்தாவா என்ற இந்தபெயருக்கு அழைப்பு பணி கூட்டமைப்பு என்று பொருள் . அதாவது மக்களை சத்திய இஸ்லாத்தின்பால் அழைக்கும் பணியை செய்யும் கூட்டமைப்பு என்பதாகும். இந்த அமைப்பின் தலைவர்ஹாபீஸ்முஹம்மதுசய்யீத் கூறியதாக பத்திரிக்கையில் வெளியான செய்தியில்,
'எங்களுக்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இல்லை. நாங்கள் நிவாரண பணிகளிலும்,கல்விப்பணிகளிலும்தான் ஈடுபடுகிறோம் என்று கூறியுள்ளார்.
இதுபோல் இவ்வமைப்பின் காஷ்மீர் தலைவர் மவ்லானா அப்துல்அஜீஸ்ஆல்வி கூறியதாக வந்துள்ள செய்தியில்,
மும்பைதாக்குதல் எங்களுக்கு கவலை அளிக்கிறது.அப்பாவிமக்கள் உயிரிழப்புக்கு காரணமான இதுபோன்ற தாக்குதல்களில் நாங்கள் ஈடுபடுவதில்லை.மும்பைதாக்குதலில் நாங்கள் எந்தவிதத்திலாவது சம்மந்தப்பட்டிருப்பதாக நிரூபித்தால் எங்கள் தவறை ஒப்புக்கொள்ள தயார். மேலும், லஸ்கர் அமைப்பு தடைசெய்யப்படுவதற்கு முன்பிருந்தே ஜமாஅத் உத்தாவா செயல்படுகிறது. எங்களுக்கு லஸ்கர்உடன் எந்ததொடர்புமில்லை என்று கூறியுள்ளார்.
உண்மையில், ஜமாஅத் உத்தாவா என்ற அமைப்பு மும்பை பங்கரவாத தாக்குதலில் சம்பந்தப்பட்டிருப்பின் அதை தடை செய்தது வரவேற்கத்தக்கதே!அதே நேரத்தில் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் உலகஅளவில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத இயக்கங்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் அதுதான் நீதியும்கூட!!

தர்காவில் தீவிரவாதிகள் நடமாட்டம்; ஹெஜ்.ராஜாகாமெடி.

அன்பர்களே,

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு அதுபோல் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே பார்ப்பதும், பரப்புவதையுமே தனது தலையாய பணியாகக்கொண்டு செயல்படுவது சங்க்பரிவார சக்திகள் என்பதை உலகறியும்.

அந்தபரிவாரத்தின் தமிழகதளபதியும், கடந்த சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்குடையவருமான ஹெஜ்.ராஜா என்பவர் கார்த்திகை தீபத்தை தடையை மீறி திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்போறேன் என்று பெரும்படையுடன் [சுமார் எழுபது பேர்] சென்றபோது காவல்த்துறையால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர், திருபரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் மாலை ஆறு மணிக்கு மேல் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாகவும், அதை காவல்துறை தெரிந்துகொண்டே கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் திருவாய் மலர்ந்துள்ளார்.

இப்படி எதையாவது அவிழ்த்து விட்டால் பாபர்மஸ்ஜித் போல் இந்ததர்காவையும் பூட்டுவார்கள் நாம் கரசேவை[?] செய்து கைப்பற்றிவிடலாம் என்ற நினைப்பா..? அல்லது வடமாநிலங்களில் தனது பரிவாரம் தேர்தலில் மண்ணை கவ்வியதை மறைத்து இருக்கும் மக்களை தக்கவைக்க பேசியதா..? என்பது திருவாளர் ராஜாவுக்கே வெளிச்சம்.
உண்மையில் தீவிரவாதிகள் யார் என்பதை மாலேகான் முதல் நம்மஊர் தென்காசிவரை நாறுவது நல்லோர்கள் அறிந்தத ஒன்று! எனவே தமிழக மக்களிடம் எடுபடாது என்பதை ராஜா உணரவேண்டும்.

10 December, 2008

மிருகநலவாரியமா..? மதநலவாரியமா..?

அன்பர்களே,
ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை என அழைக்கப்படும் தியாக திருநாள் அன்று முஸ்லிம்கள் ஆடு,மாடு,ஒட்டகம் போன்றவைகளை அறுத்து ஏழை மக்களுக்கு அந்த இறைச்சிகளை விநியோக்கித்து அந்த மக்களையும் சந்தோஷமாக பெருநாளை கொண்டாட வைப்பார்கள்.

இவ்வாறு அறுப்பதற்காக தமிழகத்தில் ஒட்டகம் கிடைக்காத காரணத்தால் வடமாநிலங்களில் இருந்து வாங்கிவருவார்கள். இதுபொறுக்காதவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொதுநல வழக்கு என்றபெயரில் வழக்கு போடுவார்கள். அவை பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த ஆண்டு யாரும் அப்படி வழக்கு தாக்கல் செய்யவில்லையே என நாம் மகிழ்ந்திருந்தவேளையில் எதோ மிருக நல வாரியமாம் அவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது. அதாவது லாரிகளில் போதிய வசதியின்றி சுமார் இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் ஒட்டகங்கள் பயணம் செய்துள்ளனவாம்! அவைகள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லையாம்! இதுபோக அவைகள் கொடூரமாக[?] வெட்டப்பட்டு உணவுக்காக பயன்படுத்தப்படுகிறதாம்! எனவே அரசு அந்த ஒட்டகங்களை கைப்பற்றவேண்டும் எனக்கூறியுள்ளனர்.

அய்யா வாரியமே! ஓட்டகத்தின்மீது இந்த அளவுக்கு கருணைகாட்டும் நீங்கள், அடுத்த ஆண்டு பக்ரீத்தின் போது வடமாநிலங்களில் இருந்து ஒட்டகங்களை நீங்களே மொத்தமாக வாங்கி அவைகளை ஏரோப்பிளேன் மூலம் சென்னை கொண்டுவந்து இறக்குங்கள் நாங்கள் சென்னையிலேயே வாங்கிக்கிறோம்.

ஆண்டில் ஒருநாள் அறுக்கப்படும்[வெட்டப்படாது] ஓட்டகத்திற்காக கரிசனம் காட்டும் நீங்கள், இந்தியாவில் தினந்தோறும் கோவில்களில் வெட்டப்படுவது ஏன் கொடூரமாக தெரியவில்லை..?

கோவிலுக்கென பக்தர்களால் வழங்கப்பட்ட மாடுகளை சில கோவில்களில் உரியமுறையில் பராமரிக்காமல் அவைகள் செத்துமடிவதும், சிலகோவில்மாடுகள் இறைச்சிக்காக விற்கப்படுவதும் ஏன் கொடூரமாக தெரியவில்லை?

சென்னை போன்ற பெருநகரங்களில் ரோட்டோரத்தில் நூற்றுக்காணக்கான மாடுகள் சம்பந்தப்பட்டவர்களால் உணவளிக்கப்படாமல் சினிமா போஸ்டரை தின்று வாழ்கிறதே இது ஏன் கொடூரமாக தெரியவில்லை?

மிருக நல வாரியமே! தமிழகத்தில் உங்கள் கண்முன்னால் நடக்கும் நம்மவர்களுக்கு[ஆடு,மாடு,கோழி] முதலில் கருணைகாட்டிஅவைகளின் உரிய பராமரிப்பிற்கு ஆவன செய்துவிட்டு அப்புறம், விருந்தாளியை[ஒட்டகம்] கவனிக்கலாம்.

09 December, 2008

சபரி மலை அய்யப்பன் மகரவிளக்கு மோசடி


பிளிட்ஸ் ஏடு அம்பலப்படுத்திய மகரவிளக்கு மோசடி;
சபரிமலையில் பக்தர்கள் தரிசிக்கும் மகர ஜோதிக்கு எந்த தெய்வீகமும் கிடையாது; அது ஒரு புரட்டு என்பது ஆதாரத்துடன் அம்பலமாகிருக்கிறது.
தானாக ஜோதி தெரிகிறது என்று நம்பி, அய்யப்பன் சக்தியோடு இந்த ஜோதியையும் முடிச்சுப் போட்டு பாமர மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
அந்த ஜோதி எப்படித் தோன்றுகிறது? யார் எங்கே எப்படி உருவாக்குகிறார்கள்? என்பதை பம்பாயில் இருந்து வெளிவரும் பிளிட்ஸ் வார ஏடு (16-1-82) அம்பலப்படுத்தி விட்டது.
அதன் விவரம்:
மூடநம்பிக்கையுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் கடின உழைப்பால் சம்பாதித்த பணம் - கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் சுரண்டப்படுகிறது.
இந்தப் பகற்கொள்ளை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறிவாளிகளின் ஒத்துழைப்பாலும், அரசியல்வாதிகளின் ஆலோசனைப்படியும், அரசாங்கத்தின் ஆதரவோடும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
மகர ஜோதி- கேரளாவில் சபரிமலை கோயிலின் எதிர்ப்புறமுள்ள 2000 அடி உயரமுள்ள மலையில் சமதரையில் குளிர்காலமான டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தோன்றுமாம்.
இந்தக் கேலிக் கூத்தை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் பகுத்தறிவாளர்கள் - இதன் பின்னணி என்ன? என்பதை பல ஆண்டுகளாகவே நிரூபித்து வருகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு இடுக்கி நீரியல் மின் திட்டத்தில் பணியாற்றிய இளம் இஞ்சினீயர் இந்தக் கட்டுக்கதையின் உண்மையை எடுத்துரைத்தார். ஆனால் அது எள்ளி நகையாடப்பட்டு பத்திரிகைகளால் புறக்கணிக்கப்பட்டு விட்டது. இந்தக் கேலிக்கூத்தின் சரித்திரத்தை வெட்ட வெளிச்சமாக்க முனைந்த பலருடைய முயற்சிகளும் இவ்வாறே வீணாயின.
கடந்த வருடம் மட்டும் 30 இலட்சம் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றார்களாம். இதில் 10 லட்சம் பேர் இந்த மகரஜோதிக் கேலிக்கூத்தைக் கண்டு களித்தார்களாம். இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு 4 கிலா தங்கமும், 30 கிலோ வெள்ளியும், ரூபாய் இரண்டரை கோடியும் வருமானமாய் கிடைத்துள்ளதாம். கடந்த வருடம் இந்த மகரஜோதி கேலிக்கூத்து ஒரு தடவை மட்டுமல்ல ; பல தடவை தோன்றியதாம். இதை விட வெட்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் அகில இந்திய வானொலியும் இதனை விமரிசையாக விளம்பரம் செய்ததாம்.
இந்த அதிசயக் கேலிக்கூத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு இல்லத்தை அடைந்த பக்தர்களில் சிலர் கொச்சியிலிருந்து வெளி வரும் இந்தியன் எக்ஸ்பிரசின் 18.1.1981 தேசிய பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்தார்கள். அதில் சொல்லப்பட்டிருப்பதாவது:
உண்டாக்குவது யார்?
மகரவிளக்கு என்று சொல்லப்படும் வெளிச்சத்தை கடந்த 10 வருடங்களாக உண்டாக்கிய, தோற்றுவிக்கும் மனிதனைப் பகுத்தறிவாளர்கள் கண்டு பிடித்துவிட்டனர். அவன் பெயர் கோபி. இவர் கேரள மின்துறையில் பணியாற்றி வருகிறார்.
அவர் பொன்னம்பலமேடு என்ற இடத்தில் சூடத்தை பானையில் நிரப்பி அதைக் கொளுத்தி கொழுந்து விட்டு எரியச் செய்து மகரஜோதியை உற்பத்தி செய்கிறார் என்பதையும் கண்டு பிடித்துள்ளனர்.
பகுத்தறிவாளர்கள் கண்டுபிடித்தனர்
இந்தப் புரட்டை - 2000-இல் கேரளப் பகுத்தறிவாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அவர்கள் எவரும் அணுகமுடியாத அந்த பொன்னம்பலமேடு என்ற இடத்தை மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து பல்வேறு இடர்ப்பாடுகளை அனுபவித்த பிறகே அடைந்தார்கள்.
அங்கே சென்றபோது வியப்பு காத்திருந்தது. 500 பேர் அங்கே குழுமியிருந்தார்கள். அரசாங்கத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஜீப்களும், தேவஸ்தானத்தைச் சார்ந்தவர்களும், அங்கே இருந்தார்கள். இதிலிருந்து அரசாங்கமே இந்த ஏமாற்று மோசடியின் பின்னணியில் இருந்தது என்பதை அறியலாம்.
அவர்களின் ஆலோசனையின்படி - கோபி என்கின்ற கோபிநாதன் (கேரள மாநில மின்துறையின் டிரைவர்) பானையில் உள்ள சூடத்தைக் கொளுத்தி பக்தர்கள் கூடி ஜோதியை தரிசிக்கக் காத்திருக்கும் சபரிமலை இருக்கும் பக்கத்தில் மூன்று முறை தூக்கிக் காட்டுவாராம். (கடந்த 10 ஆண்டுகளாக இந்த டிரைவர்தான் இந்த மோசடியை சாமர்த்தியமாக செய்து வருகிறார். அனுபவம் காரணமாக இந்தத் தொழிலுக்கு தொடர்ந்து அவரே நியமிக்கப்பட்டு வருகிறார்).
1973 ஆம் வருடம் மற்றொரு பிரிவினர் இந்தக் கேலிக்கூத்தை அம்பலப்படுத்திய பொழுது அவர்கள் தேவஸ்தான அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் சமூக நல விரோதி என்று கைது செய்யப்பட்டார்கள்.
தகுந்த சான்று இல்லாமையினால் உடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
1979 இல் நடந்தது
1979 ஆம் வருடம் இந்த மகரஜோதி தோன்றவில்லை. மகரஜோதிக் கடவுள் வேறு எங்காவது முக்கியமான வேலையில் ஈடுபட்டது இதற்குக் காரணமல்ல; கோபி என்ற கோபிநாத நாயர் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லாததே காரணமாகும்.
இந்த மகரஜோதி கேலிக் கூத்து 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கியதாகும். பம்பா திட்டத்திற்கு கேரள மின்துறை அடர்ந்த காடுகளை கையகப்படுத்தி அழித்தது. அப்போது காடர், மலையர் என்ற மலைவாசிகள் அந்தக் காட்டை ஆக்கிரமித்திருந்தனர். இந்த மலைவாசிகள் தங்களைக் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், மாமிசத்தை வேக வைக்கவும் நெருப்பை உண்டாக்கினார்கள்.
ஆனால் இந்த வெளிச்சத்தை சபரி மலையில் உள்ள மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் கூட்டம் இதனைத் தங்களுக்குச் சாதகமாக பணம் திரட்டும் வழியாகப் பயன்படுத்திக் கொண்டது.
முதல்வருக்கு மனு
கேரளப் பகுத்தறிவாளர்கள் கழகம் கேரள இடது சாரி அணி முதல்வர் இ.கே. நயினாரிடம் ஒரு மகஜரை அளித்தார்கள். அதன் பிரதியை எல்லா எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கும் அனுப்பினர். இந்த மோசடியை அம்பலப்படுத்த விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டுமென்ற கோரிக்கை விட்டார்கள்.
ஆனால் அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை. கோரிக்கை மனு தூக்கி எறியப்பட்டு விட்டது. எளிதில் ஏமாறும் அப்பாவி மக்கள் சபரிமலைக்கு வந்து ஜோதி தரிசித்து ஏமாறும் ஏமாற்றுவித்தை நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது!
நன்றி: 'பிளிட்ஸ்' 16.1.1982
நன்றி; விடுதலை

மன்னைக்கவ்விய மதவெறிசாமியாரிணி

அன்பர்களே,
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு பலத்த அடியை மக்கள் பரிசளித்துள்ளனர். தான் ஆண்டுவந்த இரண்டு மாநிலங்களை காங்கிரசிடம் கோட்டைவிட்டுவிட்டு பாரதீய ஜனதா கொட்டாவி விட்டுக்கொண்டிருக்க ப.ஜ.வோடு அவ்வப்போது முட்டிக்கொள்வதும், ஒட்டிக்கொள்வதுமாக அரசியல் நடத்திவந்த, பாபர்மஸ்ஜித் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டவுடன் சந்தோஷமிகுதியால் முரளிமனோகர்ஜோசி முதுகில் சவாரி ஏறிய சாமியாரினினி[?] உமாபாரதி மத்தியப்பிரதேசத்தில் மன்னைக்கவ்வியுள்ளார்.

இவரது பாரதீய ஜனசக்தி சார்பாக இருநூற்றி பதினாறு இடங்களை வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வெறும் ஐந்து இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதில் ஹைலைட் என்னவெனில், ம.பி.யில் ப.ஜ. ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் உமாபாரதி பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதுதான். இதிலிருந்து இந்துத்துவாவை ஆதரிக்கும் மக்கள்கூட அதிதீவிர இந்துதுவாவான உமாபாரதியை ஆதரிக்க தயாரில்லை. எனவே, இனிமேலாவது உமாபாரதி தனது மதவெறியை பரப்பாமல் மதத்தை பரப்பட்டும்.

08 December, 2008

மொட்டைஇமெயில்களும், முஸ்லிம்கள்மீதான கழுகுப்பார்வையும்.


அன்பர்களே,
இந்திய சுதந்திர தினம் ,குடியரசுதினம், பாபர்மஸ்ஜித் இடிப்புதினம் மற்றும் இதுபோன்ற முக்கிய நாட்களில் நாட்டில்உள்ள முக்கிய இடங்களை தகர்க்கப்போகிறோம் என்று ஒரு மொட்டை இமெயில் அல்லது ஒரு தொலைபேசி அழைப்பு காவல்துறைக்கு வந்தவுடன், அந்ததகவலில் குறிப்பிட்ட இடங்களை சுற்றிவளைத்து பாதுகாப்பு என்றபெயரில் அந்த இடங்களுக்கு வரும் மக்களை சல்லடை போட்டு துருவ அந்த மக்களின் கோபம், வெறுப்பு [முஸ்லிம்கள் மட்டுமே தீவிரவாதிகள் என்று எழுதப்படாத சட்டம் உள்ளதால்] முஸ்லிம்கள் மீது திரும்பவேண்டும் என்பதற்க்காக சில முஸ்லீம் எதிர்ப்பாளர்கள் இதுபோன்ற மொட்டைமெயில்/அழைப்புகளை அனுப்புவதுண்டு.
மேலும், விளையாட்டுக்காகவும், தனது எதிரியை பழிவாங்கும் எண்ணத்துடனும் இதுபோன்ற மெயில்/அழைப்புகளை அனுப்புபவர்களையும் காணலாம். அவ்வளவு ஏன்.? பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு நம்ம மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி பேசுவது போல் மொட்டை அழைப்பு சென்றதாக செய்திகள் பார்க்கிறோம்.
அப்படித்தான் #மதுரை மாவட்ட கலெக்டர் இமெயில் முகவரிக்கு கடந்த 4ந் தேதி ஒரு மிரட்டல் தகவல் வந்தது. அதில், பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்களில் டிசம்பர் 6ந் தேதி வெடிகுண்டுகள் வெடிக்கும். இதே போல் ஜனவரி 26ந் தேதி குடியரசு தினத்தன்றும் 3 கோவில்களிலும் குண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்த செல்போன் நம்பர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூரை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் ரத்தினம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. தனிப்படையினர் ரத்தினத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இமெயில் மிரட்டல் அவர் அனுப்பவில்லை என்றும், ஆனால் அவருக்கு எதிராக அதே ஊரை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் மணிமாறன் (வயது 30) என்பவர் திருப்பூரில் இருந்து அனுப்பி இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருப்பூர் விரைந்தனர். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மணிமாறனை பிடித்து விசாரித்தனர். அப்போது ரத்தினத்துக்கு எதிராக, அவரை போலீசில் மாட்டி விடுவதற்காக இந்த இமெயில் மிரட்டலை அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் மணிமாறனை மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பரபரப்பு வாக்குமூலம் இதன் பின்னர் போலீசாரிடம் மணிமாறன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
எனது சொந்த ஊர் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் ஆகும். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. படித்தேன். பிறகு ஓராண்டு கம்ப்யூட்டர் பயிற்சியும் முடித்தேன். படிக்கிறபோதே அதே ஊரை சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டேன்.எங்களுக்கு நந்தீஸ்வரன் (8), பிரியதர்ஷனி, ரோகிணி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். மானாமதுரையில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் டீச்சராக வேலை பார்த்தேன். குடும்பம் நடத்த சம்பளம் போதாததால் திருப்பூர் சென்றேன். அங்கு ஒரு நிறுவனத்தில் டிசைனிங் பிரிவில் வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி மற்றும் குழந்தைகள் மிளகனூரில் இருந்து வருகிறார்கள். ஆத்திரம்கடந்த 2006&ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் எனது மனைவி ஹேமலதா காங்கிரஸ் கட்சி சார்பில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டார். இந்த சமயத்தில் ரத்தினத்துக்கும், எனது மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது எனக்கு தெரியவந்து இருவரையும் கண்டித்தேன். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்தேன். ரத்தினத்தை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ந் தேதி எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. பாதுகாப்பு என்ற பெயரில் போலீசார் பரபரப்பாக இருக்கும், இந்த நேரத்தில் ரத்தினம் பெயரில் முக்கிய கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் அவரை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று கருதினேன். இதற்கான திட்டத்தை நிறைவேற்ற ரத்தினம் பெயரில் இமெயில் முகவரியை தயார் செய்தேன். இதன் மூலம் மீனாட்சி அம்மன், ராமநாதசுவாமி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன். கைதுஇதற்காக உயர் போலீஸ் அதிகாரிகளின் இமெயில் முகவரிகளை தேடியபோது கிடைக்கவில்லை. அப்போது தான் முதல்அமைச்சரின் தனிப்பிரிவு இமெயில் முகவரி கிடைத்தது. இதன் வழியாக ரத்தினம் பெயரில் வெடிகுண்டுமிரட்டல் குறித்த தகவலை அனுப்பினேன். அதில் இப்படிக்கு ரத்தினம், மிளகனூர், சிவகங்கை மாவட்டம் என்பதோடு அவரது செல்போன் நம்பரை குறிப்பிட்டு இருந்தேன். இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் என்னை கைது செய்தனர். நான் வேண்டும் என்று இந்த மிரட்டலை விடுக்கவில்லை. எனது எதிரியான ரத்தினத்தை போலீசில் சிக்க வைக்கவே இதை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.#
அய்யாமணிமாறா! உன்னோட சொந்தப்பகையை தீர்ப்பதற்கு முஸ்லிம்களோடு சம்பத்தப்பட்ட நாள்தான் கிடைத்ததா..? இதுபோன்ற மொட்டைமெயில் பேர்வழிகளுக்குவழங்கப்படும் தண்டனை மற்றவர்கள் திருந்து அளவுக்கு இருக்கவேண்டும்.
ஆக்கம்;முகவை அப்பாஸ்
செய்தி நன்றி;தினத்தந்தி

07 December, 2008

பாபர் மசூதி இடிப்பு; 16 ஆண்டுகள் ஆகியும் அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

16 ஆண்டுகள் ஆகியும் பாபர் மசூதி இடிப்பு
அத்வானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
மத்திய அரசுக்குகேள்வி;
சென்னை, டிச. 6- மும்பையில் அண்மையில் 60 மணி நேரத்திற்கு மேல் போராடி தீவிரவாதிகளை அழித்துள்ளனர். இந்த செயலுக்கு உளவுத் துறையின் செயல்பாடு தோல்வி அடைந்து விட்டது என்பதைத்தான் காட்டுகிறது. அதற்காக உள்துறை சார்பில் வருத்தத்தை மன்னிப்பைக் கோருகிறேன் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தீவிரவாதத்தினுடைய ஆணிவேர் கண்டு பிடிக்கப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அது வரவேற்கக்கூடிய செய்தியாகும். மத்திய அரசிற்கு ஒரு வேண்டுகோளை இந்த நேரத்திலே வைக்கிறேன். இன்றைக்கு பாபர் மசூதி இடித்த நாள் (டிச. 6) பாபர் மசூதி இடிக்கப்பட்டு பதினாறு ஆண்டுகள் ஆகின்றன.
பாபர் மசூதி முதல் குற்றவாளி அத்வானி
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் முதல் குற்றவாளி எல்.கே.அத்வானிதானே. அவர் உள்துறை அமைச்சராக இருந்தார். பிறகு துணைப் பிரதமராக ஆனார்.
இன்றைக்கு பிரதமர் பதவி வேட்பாளர் நான் தான் என்று அறிவித்துக் கொண்டிருக்கின்றார். பதினாறு ஆண்டுகாலமாக இந்த வழக்கு ஏன் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது?
லிபரான் கமிஷன் 40 முறை நீட்டிப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்காக நியமிக்கப்பட்ட லிபரான் கமிசன் இன்னமும் இருந்து கொண்டிருக்கின்றது. நாற்பது முறை லிபரான் கமிஷன் காலம் நீட்டிக்கப்பட்டே வந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் 16 ஆண்டுகள் ஆகியும் ஏன் இன்னமும் தண்டிக்கப்படவில்லை! என்பதை இந்திய அரசுக்கு கேள்வியாக வைக்கின்றோம்.
தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தில் மோடி
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்ட ஒரு தீவிரவாதி என்ன வாக்குமூலம் கொடுத்திருக்கின்றான்? அவன் இந்த முறையில் ஈடுபடுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது என்பதை பிடிபட்ட அந்தத் தீவிரவாதியே சொல்லியிருக்கின்றான்.
எனக்கு, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், மோடி பேசிய பேச்சு, பிரவின் தொகாடியா போன்றவர்கள் பேசிய பேச்சு போட்டுக் காட்டப்பட்டது. அதுதான் எனக்கு ஊக்கமாக இருந்தது என்று அவன் வாக்குமூலத்திலே சொல்லியிருக்கின்றான்.
ப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமோ தீவிரவாதத்தை வேரிலிருந்து அழிக்கும் நடவடிக்கையை எடுப்போம் என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், பாபர் மசூதியை தாக்கிய தீவிரவாதிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒரு செய்தியாகும்.
இதிலே ஆர்.எஸ்.எஸ்சா, பி.ஜே.பியா, அந்த மதமா? இந்த மதமா? இந்துத்துவாவா? முஸ்லிமா? அந்த ஜாதியா? இந்த ஜாதியா? என்று பார்க்காமல் தீவிரமான நடவடிக்கை எடுத்து மக்களை காப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோளாகும்.
இந்து தீவிரவாதிகள் மீது என்ன நடவடிக்கை?
அதே போல மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு சம்பவம், பிரக்யாசிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித், தயாயனந்த் பான்டே (சங்கராச்சாரி) ஆகிய இந்துத் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகள், தீவிரவாதச் செயல்கள் செய்த இவர்கள் மீதும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதையும் இந்த நேரத்திலே வேண்டுகோளாக வைக்கின்றோம்.
நன்றி; விடுதலை.

ஷாருக்கானின்திருக்குரான்விளக்கம்[?]

அன்பர்களே,
பொதுவாக திரையுலகத்தை சேர்ந்த முஸ்லிம்கள் இஸ்லாத்தை பெரிய பொருட்டாக கருதுவதில்லை.பணம்கொடுத்தால் எப்படிவேண்டுமானாலும் நடிப்பவர்கள்.இவர்களால் இஸ்லாத்திற்கு யாதொரு இழப்புமில்லைஎன்பதால் ஏனைய முஸ்லிம்களும் இவர்களை கண்டுகொள்வதில்லை. ஆனாலும் முஸ்லீம் பெயர்தாங்கி நடிகர்,நடிகைகள் தாங்களும் முஸ்லிம்கள் என்று காட்டிக்கொள்வதற்காக அவ்வப்போது இஸ்லாம் சம்பந்தமாக ஏதாவது கருத்துசொல்லி மாட்டிக்கொள்வார்கள்.

அந்தவகையில் சமீபத்தில் நடந்த மும்பை தீவிரவாதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான், திருக்குரான் தொடர்பாக சில கருத்துக்களை கூறியுள்ளார். அதைப்படித்தாலே அவருக்கு இஸ்லாத்தின் மீதுள்ள ஈடுபாட்டை[?]விளங்கிக்கொள்ளலாம்.

# அதிலும் குறிப்பாக ஒரு இந்து மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் கொண்டுள்ள நான் ஒரு படித்த, தாராள சிந்தனையுள்ள முஸ்லிம்.#

'இணைகற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும்வரை அவர்களை திருமணம் செய்யாதீர்கள்! இணைகற்பிக்கும் பெண்கள் எவ்வளவுதான் உங்களை கவர்ந்தாலும் சரியே![அல்குரான்]

இறைவனுக்கு இனைவைக்கும்பென்னையே திருமணம் செய்ய இறைவன் தடுத்திருக்கும்போது, அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாத ஒரு இந்து பெண்ணை திருமணம் செய்ததைசொல்லி 'தன்னை தாராள சிந்தனையுள்ள முஸ்லீம் என்று சொல்லி கொள்கிறார்.

# புனித குரானை படித்திருக்கிறேன். அது, ஒரு மனிதனை நீங்கள் குணமாக்குகிறீர்கள் என்றால் ஒட்டுமொத்த மனித குலத்தையே குணமாக்குகிறீர்கள். ஒருவரை காயப்படுத்துகிறீர்கள் என்றால் ஒட்டுமொத்த மனித குலத்தையே காயப்படுத்துகிறீர்கள் என்று கூறுகிறது. #
மேற்கண்ட வசனம் குணப்படுத்துவதை சொல்லவில்லை. கொலைசெய்வதை பற்றியதாகும்.

'கொலைக்கு பதில்லாகவோ,பூமியில் செய்யும் குழப்பத்திற்கு பதிலாகவோ அன்றி, ஒருவர் மற்றொருவரை கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலைசெய்தவர் போலாவார் என்றும், ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார்.[அல்குரான்]

# ஜிகாத் என்னும் புனிதப்போர் உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச்செல்லும் என்று குரானில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.#

'இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்!யாரேனும்அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்டாலோ, வெற்றிபெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.[அல்குரான்]'

'அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தவர்கள் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்;உணவளிக்கப்படுகின்றனர்.[அல்குரான்]
இந்த வசனத்திற்கு விளக்கமளித்த நபி[ஸல்] அவர்கள், ஜிகாத் செய்து உயிரை நீத்த அவர்கள் பச்சை நிறத்து பறவை வடிவில் சொர்கத்தில் சுற்றித்திரிவார்கள். என்று கூறியுள்ளார்கள்.

குரானிலும் ஹதீஸிலும் அல்லாஹ்வின் பாதையில் ஜிகாத் செய்தோருக்கு சொர்கம் உண்டு என வாக்களிக்கப்பட்டிருக்கும்போது அதை ஷாருக்கான் மறுக்கிறார்.[குறிப்பு;மும்பையில் தீவிரவாதிகள் நடத்தியது ஜிகாத்அல்ல.]

# நான் எல்லோருக்கும் வேண்டிக்கொள்வது, இளைய தலைமுறையினரை குரானை சரியாக அதன் அர்த்தம் உணர்ந்து வாசிக்கச் செய்யுங்கள்#

ஷாருக் அவர்களே, இது வரவேற்க தக்க கருத்துதான் அதேநேரத்தில் முதலில் நீங்கள் குரானை சரியாக அர்த்தம் உணர்ந்து வாசியுங்கள். நீங்கள் உண்மையில் குரானை மதிப்பவராக இருந்தால் மார்க்கம் அனுமதிக்காத சினிமா துறையிலிருந்து வெளியேறி இறைவனுக்கு அஞ்சிய முஸ்லிமாக வாழ்ந்து நாளை மறுமையில் சொர்க்கத்தை அடைய முயலுங்கள்! அதுதான் எங்களின் ஆசையும்கூட.

06 December, 2008

போர்தீர்வல்ல! பேச்சுவார்த்தையில் நல்லமுடிவை எட்டலாம்- கம்யூனிஸ்ட்.

அன்பர்களே,
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து கருத்து தெரிவித்த வருங்கால அமெரிக்க அதிபர் ஒபாமா, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதகுழுக்களின் முகாம்கள்மீது இந்தியா நேரடியாக தாக்குதல் தொடுக்கலாம் என்று கூறியிருந்தார். அதுபோல் தேசபக்தியை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துள்ள[?] ஆர்.எஸ்.எஸ்.சின் ராஜ்நாத் சிங் மும்பை தாக்குதலுக்காக பாகிஸ்தானை பழிவாங்கவேண்டும் என்று விஷம் கக்கியுள்ளார்.

பொதுவாக ஒருநாட்டிற்கு அடுத்தநாட்டில் உள்ள தீவிரவாதிகளால் பாதிப்பு ஏற்படும்போது, அந்த தீவிரவாதிகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான முறையான ஆதாரங்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் அளித்து அந்த நாட்டின் மூலம் அந்தநாட்டு ராணுவத்தின் மூலம் தீவிரவாதிகளின் முகாம்களை கண்டறிந்து அழிக்குமாறு வேண்டுகோள் விடுக்கலாம். அதைவிடுத்து யாரோ சில பயங்கரவாதிகள் செய்த செயலுக்காக ஒருநாட்டின் மீது போர்தொடுப்பது அறிவுடமையாகாது.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டதற்கு உசாமாதான் காரணம் அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் புஷ். உசாமாதான் செய்தார் என்பதற்கான ஆதாரத்தை எங்களிடமோ, அல்லது சர்வதேச இஸ்லாமிய நீதிமன்றத்திலோ சமர்பியுங்கள் உடனே உசாமாவை ஒப்படைக்க தயார் என்றது தாலிபான் அரசு.அமெரிக்கா முறையான ஆதாரங்களை ஒப்படைத்து உசாமவை கைதுசெய்து அவர் தவறுசெய்திருந்தால் அதிகபட்சதண்டனை வழங்கினால் யாருக்கும் ஆட்சேபனை இருந்திருக்காது. ஆனால்,புஷ் செய்தது என்ன?
ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தாலிபான்களை அழித்தாரோ இல்லையோ லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றுகுவித்தார்/ குவித்தும் கொண்டிருக்கிறார்.

இதுபோன்ற ஒரு அநியாயத்தை இந்தியாவும் செய்யவேண்டும் அதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு அவப்பெயரை உண்டாக்கவும், இதைவைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரியணையை கைப்பற்றவும் சங்கபரிவாரம் துடிக்கிறது.இதற்க்கு அரசு இடம் கொடுத்துவிடக்கூடாது.

மேலும், இதே கருத்தை அதாவது தீவிரவாதிகளை அழிக்கப்போறோம் என்றபெயரில் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது முறையல்ல என்று இந்தியகம்யுனிஸ்ட் கட்சியும் கூறியுள்ளது. அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.பரதன் அவர்கள்,

#டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசுகையில், மும்பை தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீதோ, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளின் முகாம்கள் மீதோ ராணுவ தாக்குதல் நடத்த வேண்டாம். அது புத்திசாலித்தனமான நடவடிக்கையாக அமையாது என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டோம். இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.# என்று கூறியுள்ளார்.
இந்திய அரசு தீவிரவாதம் என்ற பதரை அகற்றுகிறேன் என்ற பெயரில் அப்பாவிமக்கள் என்ற நெற்பயிருக்கு சேதம் விளைவித்துவிடக்கூடாது.



பாபர் மஸ்ஜித் ஓர் வரலாற்றுப் பார்வை



பிரச்சினை உருவான விதம்

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.
வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.
'இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்' என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
'இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது' என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.
ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.
இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.
அயோத்தியில் ராமர் பிறந்தாரா?
அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.
இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.
இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, 'அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.
இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:
கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.
துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.
கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.
அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.
இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.
கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.
இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.
இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, 'இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்' எனக் கூறுகிறது.
அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.
ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் 'அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்' எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.
இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.
இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?
இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.
'இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்' என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.
அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.
ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.
அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.
''இந்த அயோத்திதான் அந்த அயோத்தி'' என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.
அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.
மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.
அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.
எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.
இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.
அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?
'பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.
இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.
அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.
குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.
கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்
பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை 'தி வீக்' (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் 'சன்டே டைம்ஸ்' (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை'' என்று அடித்துக் கூறுகிறார்.
'மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்' என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?
இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் 'அமர கோஷா' என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.
லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?
அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், 'இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.
ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட 'ரேடியன்ஸ்' பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.
அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.
கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?
இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.
மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.
துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.
இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.
இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ''கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே'' எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.
உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.
பாபர் கோவிலை இடிப்பவரா?
இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.
ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.
பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?
பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,
''மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்'' என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?
பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.
கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.
பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.
பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.
பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.
கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ''உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்'' என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.
அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.
வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்
''கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்'' என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.
1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.
இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.
1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.
எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.
இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.
நன்றி; Tntj.net

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்.


அன்பர்களே,

இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூறும் இந்நாளில்,

உண்மைமுஸ்லிம்களாக வாழ்ந்துகாட்டுவதோடு

இந்த சத்திய மார்க்கத்திற்காக எங்கள் இன்னுயிரையும் இழந்திட தயங்கமாட்டோம் என்று உறுதியேற்போம்.

எனது சகோதரர்கள்/சகோதரிகள் அனைவருக்கும் ஈத்முபாரக்!

அரபா நோன்பை மறந்துடாதீங்க..!


அன்பர்களே,

அல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட அடியார்களை அல்லாஹ் சொர்கத்தில் சேர்க்கும் பொருட்டு சின்ன சின்ன அமல்களுக்கும் கணக்கிலடங்கா நன்மைகளை அள்ளித்தருகிறான். இதுபோக மெகா ஜாக்பாட் பரிசுகளை தரக்கூடிய அமல்களை தனது திருத்தூதர்[ஸல்] அவர்கள மூலம் தன்னுடைய அடியார்களுக்கு அருளியுள்ளான்
அப்படிப்பட்ட மகத்தான அமல்தான் அரபாநோன்பு இதைப்பற்றி h

# நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்.#
அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்.#

என்ன சகோதரர்களே! ஒருநாள் நோன்புக்காக இரண்டுவருட பாவங்களை மன்னிக்க அல்லாஹ் ரெடி, நீங்க ரெடியா..?

அரசு சொகுசு[?] பேருந்துகளும், மூட்டைப்பூச்சிகளும்.



செய்தியை படிக்க செய்தியின்மீது டபுள் கிளிக் செய்யவும்.
நன்றி ;தினத்தந்தி.

05 December, 2008

இது நாட்டிற்கு ரொம்ப முக்கியம்...?


அன்பர்களே,
பிரிக்கவே முடியாதது எது என்றால் கருணாநிதியும்-சிலைகளும். தமிழகத்தில் உள்ள சிலைகளை நீங்கள் பார்த்தால் அவை பெரும்பாலும் கருணாநிதி திறந்ததாகத்தான் இருக்கும். நடிகர் சிவாஜி சிலைத்திறப்பு கோர்ட்வரை சென்று ஒருவழியாக திறக்கப்பட்டபோது, இந்த சிலை திறக்கப்படாமல் இருந்திருந்தால் நீங்கள் எனக்கு சிலைவைக்க இடம் தேடியிருக்க வேண்டியதிருந்திருக்கும்.என்று திரு.கருணாநிதி பேசினார். அந்த அளவுக்கு சிலைவைப்பதில் அளப்பரிய ஆர்வமுடையவர்.
இந்த சிலைகளால் ஏற்ப்படும் நன்மையைவிட தீமைகள்தான் அதிகம் ஏற்ப்படுகிறது. இந்தசிலைகளின் பெயரால் தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் மனிதர்களின் தலை உருட்டப்பட்டத்தை நாம் மறந்திருக்க முடியாது. சமீபத்தில் கூட சில தலைவர்கள் சிலை சிலரால் அவமதிக்கப்பட்டு அதனால் சாலைமறியல் நடந்ததையும் நாம் அறிவோம்.
ஏற்க்கனவே இருக்கும் சிலைகளால் ஏற்ப்படும் பிரச்சினைகளை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும்போது, டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பேசிய திரு.கருணாநிதி பெங்களூரில் கடந்த இருபத்து ஆண்டுகளாக திறக்கமுடியாமல் இருக்கும் திருவள்ளுவர் சிலையை உடனே திறக்க ப.சிதம்பரம் முயற்சி செய்யவேண்டும் இதுதான் அவரின் முதல் பணியாகவும் இருக்கவேண்டும்.என்றுபேசியுள்ளார்
திருவள்ளுவர் சிலை இருபத்து ஆண்டுகாளாக திறக்காமல் இருப்பதால் நாட்டிற்கு எந்த இழப்புமில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கபடவில்லை. திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறக்காமல் நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று கருணாநிதி உள்ளிட்ட எந்த முத்தமிழ் ஆர்வலர்களும் பிடிவாதம் பிடிக்கவில்லை.
மும்பையில் சமீபத்திய தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பின், சிவராஜ் பாட்டில் பதவிவிலகியதை அடுத்து பதவியேற்றுள்ள திரு. சிதம்பரத்திற்கு முன்னாள் உள்ள பிரதான முதல்பணி நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரவாதத்தை ஒழிப்பதாகும். சிலை திறப்பு அல்ல.
திருவள்ளுவர் மற்றும் ஏனைய தலைவர்கள் நாட்டிற்கு, தமிழுக்கு செய்த சேவையை மதிப்பதாக இருந்தால் அவர்களைப்போல் மக்கள் நேசிக்கக்கூடிய வகையில் வாழ்ந்துகாட்டுவதுதான் அவர்களை மதிப்பதாகும். அதைவிடுத்து மறைந்த அந்த மாமேதைகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் சிலைஎழுப்பி அவர்கள் தலையில் பறவைகள் எச்சமிட வைப்பது அழகல்ல.
இதை திரு. கருணாநிதியும், ஏனைய சிலை விரும்பிகளும் புரிந்து கொண்டால் சரி.

04 December, 2008

ஒண்ணுமே புரியல...த.த.ஜ.வுல....!



அன்பர்களே,
பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டத்தை வழக்கம்போல தமிழகத்தில் '[சமுதாயத்தை முன்னேற்றுவது ஒன்றையே கொள்கையாக..?கொண்டுள்ள ] முஸ்லீம் அமைப்புகள் தனித்தனியாக போராட்டம் அறிவித்துள்ளார்கள்.
இதில் பிரதானமாக த.மு.மு.க. ரயில் மறியல் என்று அறிவித்துள்ளது.
அடுத்து, த.த.ஜ. நோட்டிஸ், போஸ்ட், சுவர் விளம்பரங்களில் 'மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்பாட்டம் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் உணர்வு பத்திரிக்கை 13;13
உணர்வலைகள் பகுதியில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய,மாநில அரசு அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. என்று போட்டுள்ளார்கள்.
ஆர்பாட்டமா..? முற்றுகையா..? த.த.ஜ. வுக்கே வெளிச்சம்.


அந்தர்பல்டி அடித்த 'அன்புத்தோழி'யின் நாயகன் திருமா..

அன்பர்களே,
சகோதரர் திருமா அவர்கள் அவ்வப்போது சிறுபான்மை சமுதாயத்திற்காக குரல்கொடுப்பவர் என்றே அறியப்பட்டிருக்கிறார். அது ஓரளவு உண்மையும்கூட,
ஜெயலலிதா முதவராக இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு பற்றி சட்டமன்றத்தில் குரல் எழுப்பியதையும், பல்வேறு கால கட்டங்களில் முஸ்லிம்கள் தரப்பு நியாயத்தை பகிரங்கமாக எடுத்துவைத்ததையும் நாம் மறக்கமாட்டோம். அந்தவகையில், பாபர் மஸ்ஜிதை மீண்டும் கட்டித்தர வலியுறித்தி அயோத்தி சென்று போராட்டம் என்று சமீபத்தில் அறிவித்தார்.
நாம் வியப்பின் உச்சிக்கு சென்றுவிட்டோம். என்ன இது! தமிழக முஸ்லீம் அமைப்புகள் பாபர் மஸ்ஜித் விசயத்தில் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, இவர் நேரடியாக களம் சென்று போராடப்போவதாக அறிவித்துள்ளார்.பரவாயில்லையே! என்று நாம் மகிழ்ந்துகொண்டிருந்தவேளையில்தான் 'அயோத்தி செல்வதை அடுத்த ஆண்டு தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அயோத்திபயனத்தை தள்ளி வைத்ததைப்பற்றி கூட நாம் வேதனைப்படவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம் என்னவெனில், நாட்டில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையை கவனத்தில்கொண்டு அயோத்தி பயணத்தை தள்ளி வைக்கிறோம் என்கிறார்.
நாட்டில் தற்போது ஒரு அசாரண சூழ்நிலை உள்ளது உண்மைதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜனாதிபதிமுதல் சாதாரண குடிமகன் வரை அதைக்களைவது எப்படி என்று யோசிக்கவேண்டிய வேளையில், அடுத்த நாட்டு பிரச்சினைக்காக பிரதமரை சந்திக்க சென்றது ஏன்.?
உங்களது நேசத்திற்குரிய விடுதலை புலிகள் பாசையில் சொல்லவேண்டுமெனில்,இலங்கை தமிழர் பிரச்சினை இந்துத்தமிழர் பிரச்சினை என்பதாலா..?
நம்முடைய நோக்கம் திருமாவுக்கு மதமுத்திரை குத்துவதல்ல. என்றும் திருமாவை நடுநிலைவாதியாக காண்பதே!

அடாடா..என்னே தேசப்பற்று!




அன்பர்களே,
நமது இந்திய திருநாட்டின் பெரும்பான்மை மக்கள் நிழலுக்கு தரும் மரியாதையை நிஜத்திற்கு தருவதில்லை. கோடிகளில்புரளும் கனவுலக மாவீரர்[?]களின் கட் அவுட்டுக்கு பாலபிசேகம் செய்வார்கள். தெருக்கோடியில் பாலின்றி பசியால் கதறும் பாலகர்களை கண்டு கொள்ளமாட்டார்கள்.
விளையாட்டின் மூலமும், விளம்பரத்தின் மூலமும் கோடிகளில்புரளும் கிரிக்கெட் வீரர்[?]கள் என்றோ ஒருநாள் அத்திப்பூத்தாற்போல் எதோ ஒருநாட்டுடன்நடந்த மேட்சில் ஜெயித்துவிட்டால், ஜெயிக்கப்பட்ட அந்த நாடுஎதோ இந்தியாவின் ஆளுகையின் கீழ் வந்துவிட்ட நினைப்பில், கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு சார்பில் மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் பணமுடிப்பும், பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த ஒலிம்பிக்கில் பல்வேறு நாடுகள் தங்கபதக்கங்க்களை குவிக்க, இந்திய ஒரு தங்கப்பதக்கத்தை மட்டும் வென்றது. எந்தப்போட்டியில் என்றால், குறிபார்த்து சுடும் போட்டியில். அந்த வீரருக்கு மூன்று கோடி ரூபாய்கள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகளும் தனியாக பரிசுகளை வழங்கி கவுரவித்தது. ஆனால், சமீபத்தில் மும்பையில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில், தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து போராடிய நிஜமான மாவீரர்களில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு ஐந்து லட்சம் அறிவித்துள்ளது.
அடாடா! நம் ஆட்சியாளர்களின் தேசப்பற்று நினைத்தாலே புல்லரிக்கிறது போங்கள்.

03 December, 2008

ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்கமுடியாது. மத்தியஅரசு அதிரடி.

அன்பர்களே,
இந்தியாவில் மன்மோகன்சிங் பிரதமராக பதவியேற்றபின் தாராள மயமாக்கல் என்றபெயரில் அந்நியநாட்டு முதலீடுகள் ஆக்கிரமித்துவிட்டதாக சுதேசி ஆதரவாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்ற ஆய்வுக்கு நாம் செல்லவிரும்பவில்லை. அதே நேரத்தில் ஒரு அந்நிய முதலீட்டை தடுப்பதில் மன்மோகன்சிங் அரசு முனைப்புகாட்டுவதில் ஒவ்வொரு இந்தியனும் சந்தோசப்பட்டேஆகணும். அதுஎன்னவெனில்,
மேற்கத்திய கலாச்சாரத்தின் பரினாமவளர்ச்சியான ஓரினசேர்க்கைதான் அது. இந்தியாவில் 25 லட்சத்துக்கு மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அங்கீகாரம் இங்கு இல்லை. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன் படி ஓரினச்சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 தங்களது உரிமைகளை பாதிக்கிறது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும் என ஓரினச்சேர்க்கை ஆதரவு அமைப்பு சில மாதங்களுக்கு முன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதார அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.ஓரினச்சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் இல்லாததால், அத்தகைய சிந்தனை கொண்டவர்கள் தங்களைப் பற்றிய உண்மையை வெளியில் சொல்ல முன்வருவதில்லை என்றும், இதனால் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் கருத்துதெரிவித்தது. இதனால் ஓரினச்சேர்க்கைக்கு விதிக்கப்படும் தண்டனையை ரத்து செய்து அதற்கு சட்ட அனுமதி கொடுக்கலாம் என யோசனை கூறியது. ஆனால் உள்துறை அமைச்சகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒழுக்கத்துக்கும் கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்திய சமூகத்தில் ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க முடியாது என தெரிவித்தது. அமைச்சகங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை சரிசெய்து பொதுவான கருத்தை தெரிவிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மல்ஹோத்ரா நேற்று 100 பக்கங்கள் அடங்கிய பதில் மனுவை தாக்கல் செய்து வாதாடினார். பதில் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:ஓரினச்சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் அதிகாரம் கோர்ட்களுக்கு இல்லை. எதை சட்டமாக்க வேண்டும். எதனை சட்டமாக்கக்கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை. இந்த அதிகாரங்கள் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. நாடாளுமன்றத்தின் முடிவு அதன் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படுகிறது. மக்களின் விருப்பங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் அறிந்தவர்கள் மக்கள் பிரதிநிதிகள். இவர்களது கடமையை கோர்ட் எடுத்துக் கொள்ள முயல்வது சரியாகாது. நீதிமன்றங்கள் நாடாளுமன்றம் போல் செயல்பட்டு சட்டத்தை மாற்ற முயற்சிக்கக் கூடாது. சட்டத்துக்கு விளக்கம் அளிக்கும் பணியை மட்டுமே நீதிமன்றங்கள் செய்ய வேண்டும். ஓரினச்சேர்க்கை தொடர்பாக எழுந்துள்ள கேள்வி, சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கம் சம்பந்தப்பட்டதாகும். இந்தியாவுக்குள் அன்னிய கலாசாரத்தை புகுத்துவதற்காக நமது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புது விளக்கம் அளிக்க நீதிமன்றங்கள் முயற்சிக்கக்கூடாது. அன்னிய கலாசாரங்களில் இந்தியா அளவுக்கு ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதில்லை. ஓரினச் சேர்க்கையாளர்கள் கோணல் புத்தியும் கோணல் சிந்தனையும் கொண்டவர்கள். இதற்கான தண்டனையை ரத்து செய்தால் இந்தியக் கலாச்சாரத்துக்கு பாதிப்பு வரும். இவ்வாறு மத்திய அரசு வக்கீல் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
அணுஆயுத ஒப்பந்தம்போல் இதிலும் அந்நியநாட்டிடம் பலிகடா ஆகாமல் இறுதிவரை மத்திய அரசு உறுதியுடன் இருந்தால் உண்மையில் பாராட்டத்தக்கதே!
ஆக்கம்;முகவை அப்பாஸ்.
செய்திநன்றி;தமிழ்முரசு